கிரியை இல்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது FAITH WITHOUT WORKS IS DEAD 53-09-05 வில்லியம் மரியன் பிரான்ஹாம் கிரியை இல்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது செய்திக்கு தொடர்புடைய வசனங்கள் 1 மத்தேயு 4:4-10, 10:8, 17:14-21, 28:20 2 மாற்கு 4:4-10, 9:14-21, 11:22, 16:17,18 3 நியாயாதிபதிகள் 3:31 4 யாக்கோபு 2:21-26, 5:6,16 5 1 யோவான் 1:9 6 2 இராஜாக்கள் 3:12-15, 7:1-18 7 ரோமர் 12:4-6 8 எபிரெயர் 3:1-2, 13:8 9 ஏசாயா 53:5 10 யோவான் 4:1-21, 4:44-51, 5:1-19, 14:12 11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:1-11 இந்தச் செய்தியானது சகோதரன். வில்லியம் மரியன் பிரான்ஹாம் அவர்களால் 1953-ம் வருடம், செப்டம்பர் மாதம், சிகாகோ இல்லினாய்ஸ்வில் அளிக்கப்பட்டது. ஒலிநாடா ஒலிப்பதிவிருந்து அச்சிடப்பட்ட ஆங்கில புத்தகத்திலிருந்து ஏட்டிதழின் பக்கத்திற்கு சொல்வடிவமான செய்தியாக மாற்ற ஒவ்வொரு முயற்சியும் துல்லியமாக செய்யப்பட்டு, இப்புத்தகம் முழுமையாக அச்சிடப்பட்டு, இலவசமாக விநியோகிக்கப் படுகின்றது. கிரியை இல்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது 53-09-05 1. நமது தலைகளை தாழ்த்தி சில நிமிடங்கள் ஜெபிக்கும் வரை நாம் நின்று இருப்போம். எங்கள் பரலோகத்தின் பிதாவே இந்த இரவு நேரத்தில் சவாலான விசுவாசத்திற்காக நன்றி செலுத்துகிறோம். "இப்போது நான் விசுவாசிக்கிறேன்" என்ற பழைய பாட்டு உலகெங்கிலும் ஒலித்து கொண்டு செல்லுகிறது. "நம்பிடுவாய், யாவும் கைகூடிடும்" நமது போதகராகிய கிறிஸ்து மலையிலிருந்து இறங்கி வந்து வல்லமையற்ற சீஷர்களிடம் சென்றதை நினைவு கூறுகிறோம். அப்போது சிலர் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை கிறிஸ்துவிடம் கொண்டு வந்து உம்முடைய சீஷர்களிடம் கொண்டு வந்தேன். அவர்களால் இவனை சுகப்படுத்தக் கூடாமற்போயிற்று. உம்மால் ஏதாகிலும் செய்ய முடியுமா என்று கேட்டார்கள். அதற்கு அவர் "நீ விசுவாசித்தால் எல்லாம் ஆகும்." விசுவாசிக்கிறவர்களாலே எல்லாமே கூடும் என்று கூறினார். 2. ஓ தேவனே, இந்த இரவிலும் நாங்கள் அது போலவே இருக்க உதவும், ஆம் விசுவாசிக்கிறேன். என் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும். எங்கள் தேவனே விசுவாசிக்கிறேன்; என் அவிசுவாசம் நீங்க உதவும் என்று துக்கத்துடன் கதறி அழுது விண்ணப்பம் செய்கிறோம். இந்த தேவனுடைய ராஜ்யத்திற்கு ஒரு சிறந்த இரவு நேரமாக இன்றைய இரவு அமையட்டும். இந்த இரவு அபரிதமாக அளவற்ற மிக அதிகமான ஆசீர்வாதத்தை இங்கு கூடியுள்ள ஒவ்வொரு விசுவாசியின் மீதும் அருளப்பட வேண்டுமாய் இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென் அனைவரும் உட்காரவும். உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. எப்போதாகிலும் இது போன்ற கூட்டங்களுக்கு நான் சகோதரர் பாக்ஸ்டரின் எழுச்சியான பிரசங்கங்களை கேட்க வருவதுண்டு. நான் சிறிது நேரங்கள் முன்பாகவே அங்கு வந்துவிட்டேன். அந்த சிறுவன் வெளியில் ஒரு வீதியின் ஓரத்தில் நின்றிருந்தான். நாங்கள் உள்ளே சென்று அங்கு அமர்ந்து பிரசங்கத்தை கேட்க துவங்கினேன். அது ஒரு அதிசயமான தூது சம்கார் தனது எருதுகளுடனும் ஆடுகளுடனும் பெலிஸ்தியரை சங்காரம் பண்ணினான்......நீ இவைகளை இருதயத்தின் ஆழத்தில் வைக்கவேண்டும். 3. நாளையத்தினம் பகல் வேளையில் கர்த்தருக்கு சித்தமானால் நான் இங்கு ஆலயத்தில் பேச வேண்டியிருக்கிறது. நீங்கள் அனைவரும் வரும்படி அழைக்கப்படுகிறீர்கள். இந்த கட்டிடத்தில் இருக்கும் ஒவ்வொரு பலவிதமான வியாதியஸ்தர்களை நாளை பகலில் அனைவரையும் சுகப்படுத்தும்படி நான் தேவனிடம் ஜெபித்துக் கொண்டு இருக்கிறேன். நாளை பகலில் மட்டுமல்ல, இன்று இரவு இங்கு அமர்ந்திருப்போர் அனைவரும் இதை பெற்றுக் கொள்ளலாம். நாளை பகலில் வேறொரு புதிய குழு இதை பெற்றுக் கொள்ளுவார்கள், அல்லது இங்கு உள்ளே வரும் யாராக இருந்தாலும் இதே நன்மைகளை பெறக்கூடும். இப்போது குளிர்ச்சியான நேரம், கர்த்தருக்கு சித்தமானால் ஒரு சிறிய செய்தியைக் கேட்போம். என்னுடைய நிகழ்ச்சி நாளை தான். தேவனுடைய சித்தம் இருக்குமானால் சிறிய செய்தியைக் கொடுக்க தேவன் ஆசீர்வதிப்பார் என்பதை நம்புகிறேன். நாளை இரவு மற்றுமொரு சுகமளிக்கும் கூட்டமாக இருக்கும். மேலும் மேலும் திங்கள் மதியம், நான் நினைக்கிறேன்............திங்கள் கிழமைக்கு அவர்கள் எப்படி வேலை செய்யப் போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் திங்களன்று பகல் வேளையில் ஒரு பிரசங்கம் இருக்கும். திங்களன்று இரவு நம்முடைய கூட்டங்கள் நிறைவடையும். இங்கு இருக்கும் அனைவர் மீதும் தேவ ஆசீர்வாதம் தங்கியிருப்பதாக. 4. இந்த வேளையில் வேதாகமத்தில் இருந்து யாக்கோபு புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்க நேராக செல்லுவோம். ஜெப நேரத்தை துவங்க மற்றும் நமக்கு..........பத்து நிமிடங்கள் இருக்கிறது. கடந்த மாலை வேளையில் நான் என்ன பேசப்போகிறேன் என்பதை கூறவில்லை அதற்காக மன்னிக்கவும். இன்று யாருக்கெல்லாம் ஜெபிக்கப்பட வேண்டும் என்று வாஞ்சிக்கிறார்களோ அவர்களையெல்லாம் வரிசையில் நிற்க வைத்து அவர்களுக்காக ஜெபிப்போம். அன்புள்ள கிறிஸ்தவ நண்பர்களே, நான் இந்த கூட்டத்திற்கு வந்தது முதல், இந்த மேடையில் வந்திருந்த, அல்லது பேசப்பட்ட, ஒரு நபர் கூட சுகம் பெறாமல் போகவில்லை. பாருங்கள்? இன்னும் ஒருவரை கூட பார்க்கவில்லை. இப்போது என்ன மகத்தானதாக உள்ளது என்றால், சிலர் செவிடராகவும், சிலர் ஊமையாகவும், சிலர்..........நல்லது, சற்று..........நாற்காலியில் முடமாகவும் உட்கார்ந்து கொண்டு, சிலர் கட்டில்களிலும் எது கிடைத்ததோ அவைகள் மீது இருந்தனர். 5. நான் கடந்த இரவு விளக்கமாக கூறியபடியே (பார்க்கவும்) தேவனே இதை செய்தார் (பார்க்கவும்) அவர் ஏற்கனவே இதை செய்துவிட்டார். நீ இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் மரிக்கும் தருவாயில் இருந்தவர்கள் சுகமளிக்கப்பட்டார்கள். இப்போது தேவன் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்க வேண்டும் என்பதே என் ஜெபம். நாம் இந்த ஆராதனையை ஆரம்பிக்கும் முன்பு, என் நண்பர் ஆஸ்பர்ன் இந்த கட்டிடத்தில் இருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவர் இங்கு இருப்பார் என்றால் அவர் இங்கு மேடைக்கு வருமாறு இந்த இரவு வேளையில் அழைக்கிறேன். நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் போது அவர் மேடையில் இருக்கட்டும். சகோதரர் ஆஸ்பர்ன் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். மேலும் நான்.... சகோதரர் ஆஸ்பர்ன் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் ஒரு இளம் கிறிஸ்தவர். தேவன் அவரை தேசத்தின் பல இடங்களில் வல்லமையாக பயன்படுத்தி இருக்கிறார். இவர் ஒரு இளைஞன், இவர் இங்கு இந்த மேடையில் இருப்பதினால் அல்ல. இவர் ஒரு இளைஞன் ஆஸ்பர்ன் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. மத வெறியின் ஒரு சிறு ரேகைகூட காணப்படவில்லை என்று நான் கூற முடியும். இவர் உண்மையிலேயே தேவனுடைய மனிதன், இவர் எதையும் உரிமை பாராட்டி கேட்பதில்லை. ஆனால் சிறிது.....இவர் வேதாகமத்தை நன்கு அறிந்துள்ளார். தேவன் என்ன கூறுகிறார் என்பதையும் அறிவார். வேதாகமத்தின்படி சாத்தானை அவனால் நகர முடியாத இடத்துடன் பிணைக்கும் வேதாகமத்தை பற்றிய அறிவை தேவன் அவருக்குக் கொடுத்திருக்கிறார். 6. இவர் தனக்கென்று ஜெப விண்ணப்பதாரர்கள் இல்லாதவர். இவர் அங்கு நின்றுகொண்டு வேத வசனங்களை விளக்கி கூறும் விதமாவது, ஜனங்கள் அதை சற்று பார்க்க மட்டும் செய்தால் போதும், அதுவரை விளக்கி கொண்டிருப்பார். அவ்வளவுதான். இதை கவனிக்கவும். இதுதான் தெய்வீக சுகமளித்தலின் ஆரம்ப நிலை. நீங்கள் இதை அறிவீர்களா? தேவனுடைய வசனம் சாத்தானை எந்த இடத்திலும் எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் மேற்கொள்ள செய்யும். இது சரிதானே? கிறிஸ்து இந்த உலகில் இருந்தபோது பரலோகத்தில் இருந்த அனைத்து வரங்களும் தன்னிடத்தில் வைத்து இருந்தார். பிதா எப்படிபட்டவராய் இருந்தாரோ அப்படியே இவரும் இருந்தார், ஏனென்றால் அவர் தேவனாக இருந்தார், குமாரன் இங்கே பூமியில் அதே விதமாக இருந்தார். ஏனென்றால் அவர் தேவனாக இருந்தார், பூமியிலே குமாரனாக இருந்தார். உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்க தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார். நீங்கள் இதை நம்புகிறீர்களா? ஆனால் அவர் சாத்தானை சந்தித்தபோது அவர் தன்னிடம் உள்ள எந்த வல்லமையையும் பயன்படுத்தவில்லை. அவர் தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொண்டார். சாத்தான் தேவனுடைய குமாரனேயானால் என்ற தேவனுடைய வசனத்தின் மீது மீண்டும் கேள்வி எழுப்பினான். "நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்த கல்லுகளை அப்பமாகும்படி செய்யும்" என்று கூறினான். 7. அதற்கு அவர் "மனிதன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்று கூறினார். அதே வார்தையைக் கொண்டு.... அவரை தேவாலயத்தின் உப்பரிகையில் மேல் கொண்டு போய் ராஜ்யங்களையெல்லாம், ஐக்கிய நாடுகளையும் மற்றும் எல்லா தேசங்களையும் காண்பித்து.......அவன் தேவனுடைய வார்த்தையை சற்று வெள்ளையடித்து வேறு வகையில் பயன்படுத்தினான். "தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்." அதற்கு அவர் மீண்டும் தேவனுடைய வசனத்தினால் பதிலளித்தார் "என்று எழுதி இருக்கிறதே...." (பார்க்கவும்) அதே தேவனுடைய வார்தையைக் கொண்டு சாத்தானை கட்டிப் போட்டார். அதன் பின்பு அவரை மலையின் மீது கொண்டு போய் உலகத்தின் ராஜ்யங்களையெல்லாம் காண்பித்து "நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அவர் எந்த தனது வல்லமையையும் பயன்படுத்தவில்லை ஆனால் மீண்டும் "என்று எழுதியிருக்கிறேதே..." என்ற தேவனுடைய வார்த்தையையே மீண்டும் பயன்படுத்தியது ஒவ்வொரு கிறிஸ்தவனும் "கர்த்தர் உரைக்கிறதாவது" என்ற தேவ வசனத்தைக் கொண்டு சாத்தானை மேற்கொள்ளலாம் என்பதை நமக்கு கற்று தருகிறது. அப்படித்தானே? 8. ஆகவே அது_ அது சகோதரன் ஆஸ்பார்ன் உண்மையிலேயே ஒரு நல்ல வேலையை செய்கிறார். எந்த போதகராலும், எந்த_ எந்த இடத்திலும் போதகராக நியமிக்க நான் சிபாரிசு செய்கிறேன். நான் ஆப்ரிக்காவில் இருந்தபோது நான் எப்போதும் ஆஸ்பர்ன் பற்றி நல்ல வார்த்தைகளையே கூறுவேன். ஏனெனில் அவர் என் சகோதரனும் தேவனுடைய ராஜ்யத்தின் பிரஜையாகவும் இருக்கிறார். அவர் இந்த நகரத்தில் இருந்தார். நான் இங்கு இருக்கிறேன் என்பதால் அவர் இங்கு இருக்கிறார், என்பதை அறிவேன். இன்றிரவு நான் அநேக மக்களுக்காக ஜெபிக்க போகும் போது அவரை என் பக்கத்தில் உட்காரும்படி செய்ய விரும்புகிறேன். இதை நான் ஏன் செய்ய வேண்டும் என்றால், இந்த இளைஞன் இளைஞன் சாத்தானுடைய போராட்டத்தையும் தேவனுடைய போராட்டத்தையும் நன்கு அறிந்தவர். ஆகவே வியாதியஸ்தர்கள் இங்கு மேடைக்கு வரும்போது சகோதரர் ஆஸ்பர்ன் அங்கு ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும். நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து சகோதரர் போஸுடனும் இன்னும் நம்மை சுற்றியுள்ள பல கிறிஸ்தவ விசுவாசிகளும் சேர்ந்துகொள்ளும்போது நீங்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவர் இங்கு கிரியை செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும். 9. வழக்கமாக இது ஒரு பகுத்தறியக்கூடிய விஷயம். நான் செய்கிறது இன்னதென்பதை உணராமல் ஒரு ஆவியை நான் வெளியே அனுப்ப முடியாது. அது பெரிய ஆபத்துக்கு காரணமாகிவிடும். நீ என்ன செய்கிறாய் என்று அறியாமல் இருப்பாயானால் அது பெரிய ஆபத்து ஆகிவிடும் என்று உனக்கு தெரியுமா? மேடையின் மீது அபிஷேகம் வந்த பிறகு, நான் ஒரு ஆவிக்கு கூட சவால் விடுவதை நீங்கள் பார்க்க முடியாது. முதலாவது அது தேவனுடைய சித்தமாய் இருக்கின்றதா என்று அறிவேன். இப்போது நீங்களே சொல்லுங்கள், இது தேவனுடைய சித்தமா? ஒரு சில சமயங்களில் இந்த மேடைக்கு ஜனங்கள் வருகின்றனர். அவர்களில் சிலர் கிறிஸ்தவர்களே இல்லை. ஆனால் அவர்களும் தங்கள் வியாதிகள் சுகமடைய வேண்டுமென்று விரும்புகிறார்கள். மேலும் அவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கக்கூடும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிலவற்றை எனக்கு செய்திருக்கவும் கூடும், அல்லது சிலவற்றை செய்யாமல் இருந்திருக்கவும் கூடும். இதுவே அவர்கள் சுகம் அடையாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. ஆகையால் புரிந்துகொள்ளுதல் திறன்படி தீர்க்கதரிசன வார்த்தைகள் முன்செல்லும் போது உன்னுடைய பிரச்சினை சரியாக எங்கு இருக்கிறது என்று காட்டுகிறது. அப்படியானால் அந்த வழியை விட்டு வெளியே வாருங்கள். அப்போது தேவன் உங்களை சுகப்படுத்தக்கூடும். 10. நீங்கள் என்னை மன்னிப்பீர்களானால் இது நீண்ட காலங்களுக்கு முன்பு நடந்தது அல்ல. நீங்கள் எனக்கு சிறிது நேரம் கொடுப்பீர்களானால் ஒரு சிறிய சாட்சியை சொல்லக்கூடும். நான் எதையும் கூற வேண்டாமென்று தான் எண்ணியிருந்தேன். ஆனாலும் இது எனது மனதில் தோன்றுகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு கூட்டம் இருந்தது, மற்றும்_மற்றும் நான் வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கும் போது அங்கு நியூ அல்பானி என்ற இடத்தில ஒரு மெத்தடிஸ்ட் ஊழியரை சந்தித்தேன். அவர் ஒரு நல்ல மனிதர். இந்த நகரம் இண்டியானா என்ற நகரத்திற்கு சற்று கீழே உள்ளது. அங்கு அவர் ஒரு நல்ல உற்சாகமான சபையை நடத்திவந்தார். அவர் "வல்லமையின் நேரம்" என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அது ஒரு அதிசயமான நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் அவர் சில வேறுபட்ட ஊழியர்களை பிரசிங்கிப்பதற்கென்று வைத்திருந்தார். அவர் என்னிடம் நீங்கள் ஒரு இரவு இங்கு வந்து பிரசிங்கிப்பீர்களென்றால் நன்றாக இருக்கும் என்று நான் விரும்புகிறேன், நான் உங்களிடம் வியாதியஸ்தருக்கு ஜெபிக்கும்படி கேட்கப்போவதில்லை என்றும் கூறினார். வீட்டில் அந்த காரியத்தை மனதில் இருந்து தூக்கி வெளியே போட முயற்சித்து மனதை அமைதியாக வைத்து கொண்டேன், காரணம் என்னவென்றால் நீங்கள் யாரிடமாவது பேச ஆரம்பித்தவுடன், மீண்டும் அதே காரியம் தான் அங்கேயும் இருக்கிறது. நீங்கள் பாருங்கள். ஆகையால் நான் அதிலிருந்து சற்று ஓய்வெடுத்துக் கொள்வேன். அவர் சொன்னார், "நீ பிரசங்கம் செய்ய வருவாயானால்............" என் வீட்டில் அமைதியாக உட்கார்ந்து என் மனதில் இருத்திக்கொள்ளுவேன். நீ ஒரு சிலரிடம் சென்று பேச ஆரம்பித்தவுடன் அங்கு மீண்டும் அதே ஓய்வுதான். நீ பிரசங்கம் செய்ய வருவாயானால் இது எந்த வகையான ஒய்வென்று நீ கவனித்துப்பார். 11 அதற்கு நான், "சரி, சகோதரர் ஜான்சன், நான் அதைச் செய்கிறேன்" என்றேன். நாங்கள் இருவரும் கென்டக்கியின் ஒரே பகுதியில், ஒருவருக்கொருவர் குழிக்கு அப்பால் வளர்ந்தோம். எனவே அவர் ஒரு மெதடிஸ்ட், நான் ஒரு பாப்டிஸ்ட்டாக இருந்தேன், நாங்கள் சபைகளின் வெவ்வேறு பிரிவுகளைப் பற்றி எப்போதும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தோம். அன்று இரவு நான் கீழே சென்றேன்......நாங்கள் ஒரு ஆராதனையை நடத்தினோம். தேவன் அதை ஆசிர்வதித்தார். அங்கு பெருந்திரளான கூட்டம் கூடியது. அவர்கள் வெளியிடங்களிலிருந்து வந்திருந்தனர். அவர்களை வீதிகளில் வரிசைப்படுத்தி நிறுத்தினோம். அவர்கள் தங்கள் கரங்களை ஒருவருடன் ஒருவராக கோர்த்து கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். 12. நாங்கள் எங்கு போகவேண்டுமோ அங்கு செல்ல பின்வழியாக சென்றோம். அங்கு கீழ்தளத்தை பார்த்தோம். அது நிரம்பி இருந்தது, நன்றாகவும் இருந்தது. நாங்கள் பின்வழியாக சென்றுவிட்டோம். சகோதரர் பிரன்ஹாம் நான் யாருக்காகிலும் ஜெபிக்க வேண்டுமென்று கேட்கப்போவதில்லை என்று வாக்கு கொடுத்தேன் என்று அவர் கூறினார். ஆனாலும் அவர் கூறினார் இங்கு ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியை இருக்கிறார். அவர் மிகவும் அன்பான ஒரு இளம்பெண். மேலும் அவர் நரம்பு வியாதியினால் பாதிக்கப்பட்டவர். பிரன்ஹாம் நீங்கள் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று அவர் கூறினார். நீங்கள் அவர் மீது கைகளை வைத்து தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக என்று அல்லது வேறு ஏதாகிலும் சொல்லி ஜெபி. நீங்கள் அவருக்காக ஜெபிக்க வேண்டுமென்று அவர் நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் பல இடங்களுக்கு சென்று இருக்கிறார். ஒவ்வொருவரும் வியாதியை சுகப்படுத்த இந்த தேசத்திற்கு வந்தனர். அவர் கடந்த பத்து ஆண்டுகளாக லூயிஸ்வில்லில் என்ற இடத்தில் ஒரு உளவியல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது அவரது நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. நானும் சரி என்று கூறினேன். 13. அவர் அந்த பெண்ணின் வியாதி நிலையைக் குறித்து கூறின விதம் நான் அங்கு இருந்த அந்த வியாதியஸ்தருக்குரிய உடையுடன் யாராகிலும் இருக்கிறார்களா என்று பார்த்தேன். அங்கு கடைசி படிக்கட்டில் ஒரு இருபத்தியெட்டு அல்லது முப்பது வயதுள்ள சற்று மூப்புள்ள அன்பான பெண் அங்கு நின்று கொண்டு இருந்தார். அவர் என்னைப் பார்த்து சகோதரர் பிரன்ஹாம் அவர்களே எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டார். நானும் அவரிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் தான் வியாதியஸ்தரா என்று கேட்டேன். அவள், " ஆம் ஐயா " என்று சொன்னாள். நான் சொன்னேன், "நல்லது, நீங்கள் பார்ப்பதற்கு வியாதி உடையவராக தோனவில்லையே " என்றேன். அவள் சொன்னாள், " நல்லது நான் _ நான் உண்மையிலேயே வியாதி உள்ளவள் அல்ல, ஆனால் எனக்கு என்ன நிலை என்று தெரியவில்லை. சகோதரர் பிரன்ஹாமே என்னால் என்னை ஒருமுகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. " என்றாள். 14. நல்லது நாம் இப்போது ஜெபிப்போம் என்று கூறி என் கைகளை அவர் மீது வைத்து ஜெபித்து அங்கிருந்து வெளியே சென்றேன். இரண்டு நாட்களுக்கு பின்பு நானும் என் மனைவியும் நியூ அல்பானி என்ற இடத்திற்கு சென்றோம். அங்கு அந்த பெண்ணை வீதியில் சந்தித்தோம். என் மனைவியும் அங்கு இருந்தார். நாங்கள் அந்த வீதியில் சென்று அந்த பெண்ணை சந்தித்தோம். நாங்கள் அவரை விசாரித்தோம். நான் இந்த நகரத்தை விட்டு வெளியேற முடியாது. அப்படி வெளியேறினால் ஒரு சில தீயவைகள் என்னை ஆட்கொள்ளும் என்று அந்த பெண் கூறினார். நான் அங்கு பார்த்த போது அங்கு ஒன்றுமே இல்லை. நான் அவரிடம் சற்று இங்கே வாருங்கள். நாம் மீண்டும் ஜெபிப்போம் என்று கூறினேன். நான் வெளியில் சென்று தேவனே இந்த சிறிய விஷயத்தில் உம்முடைய கிருபை இருப்பதாக. நான் அந்த பெண்ணிடம் நீ ஒரு கிறிஸ்தவ பெண்ணா என்று கேட்டேன். 15. அதற்கு அந்த பெண் ஆம் ஐயா நான் ஒரு மெத்தடிஸ்ட் சபையை சேர்ந்தவள். உங்களுக்கு தெரியுமா, நான் மறுபடியும் பிறந்தவள் என்று அவள் கூறினாள். அது உண்மையிலேயே மிகவும் நல்லது என்று கூறினேன். நான் அவருக்காக ஜெபித்துவிட்டு அங்கிருந்து அந்த அன்பான பெண்ணைவிட்டு கிளம்பினேன். நான் அதன் பின்பு பல வெளிநாடுகளுக்கு சென்று பின்பு மீண்டும் வந்து அங்கு மீண்டும் வீதிக்கு வந்து சற்று களைப்புடன் நின்றேன் மேலும் .............. மேடா என்னிடமும் என் மனைவியிடமும் "பில் இவர் இங்கு இருக்கும்போது மீண்டும் கர்த்தருடைய தூதன் வீட்டில் தோன்றுவாரேயானால் இந்த ஏழை சிறு பெண் தனது மனதில் போதுமான தெளிவுடன் இல்லை. ஒரு கூட்டத்திற்கு வரவேண்டுமென்று அவள் கூறினாள். அவள் இப்போது இங்கு இருக்கிறாள்......அவர்கள் எப்போது கூட்டத்திற்கு அழைத்து செல்லவேண்டுமென்று அவள் தீர்மானித்தாள். அவர்கள் தன்னையும் சேர்த்துக்கொண்டு கூட்டத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று அவள் விரும்பினாள். அவள் அந்த நகரத்தைவிட்டு வெளியேறுவதற்கு மிகவும் பயந்தாள். நீ இந்த நகரத்தைவிட்டு வெளியேறினால் இறக்க வேண்டியிருக்கும் என்று பிசாசு அவளிடம் கூறியிருந்தான். அவர் மீண்டும் காணப்படுவாராயின் மிகவும் நல்லது என்று நானும் கூறினேன். 16. ஒரு நாள் காலை அவர் அங்கு வந்தார் அங்கு என்ன நடக்கிறது என்பதை கூற எனக்கு நேரம் போதாமல் இருந்தது. ஆனால் அது மிகவும் ஆச்சரியமானதாக இருந்தது. அவர் அறைக்குள் வந்தார். அது காலை நேரமாக இருந்தது. இந்தியாவைப் பற்றியும் ஆப்ரிக்காவைப் பற்றியும் எனது பைபிளில் உள்ள துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. உங்களில் யாருக்காகிலும் இதன் நகல் தேவைப்படுமாயின் நீங்கள் இதனை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் இதைக குறித்துக் கொண்டு இது வார்த்தைக்கு வார்த்தை அப்படியே அது எப்படி நிறைவேறும் என்று கவனித்துப்பார். நாம் அங்கு போகும் போது மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பேர்கள் இந்தியாவில் தேவனிடம் வருகிறார்களா என்று கவனித்து பார். இது சரியில்லையென்று நீ கண்டால் இங்கு இந்த பத்திரிக்கை இதழில் காணப்படாமல் இருப்பவைகள் அப்படியே இருக்குமே. பின்லாந்து நாட்டில் இருந்த சிறுவனைப் போல் வரும் முன்பே தேவன் முன்னறிவிக்கின்றார். 17. அன்று காலையில் நான் மேடாவிடம் கூறினேன். கர்த்தருடைய தூதன் இப்போது வீட்டில் இருக்கிறார். அவர் நம்முடன் ஒருநாள் அல்லது ஒரு மணி நேரம் தாங்கிவதற்காக வந்துள்ளார். ஆனால் அவர் எவ்வளவு காலம் நம்முடன் தங்குவார் என்பது எனக்கு தெரியாது. நான் அந்த சிறுபெண்ணை நியூ அல்பானியிலிருந்து அழைக்கட்டுமா? அப்படி முடியுமானால் செய் என்று நான் சொன்னேன். அதே நேரத்தில்... லூயிஸ்வில்லியில் உள்ள பெரிய வால் ஸ்ட்ரீட் பாப்டிஸ்ட் சபையின் உறுப்பினரான கென்டக்கியின் லூயிஸ்வில்லில் இருந்து வந்த அந்த நபர் நேற்று இரவு புற்றுநோயால் இறந்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு, இங்கு வந்து கொண்டிருந்த அவர், அன்று காலை, முன் அறையில் சுகம் பெற்றார். 18. அந்த சிறு பெண்ணும் அங்கு வந்து சேர்ந்துக் கொண்டாள். அவளும் அங்கிருந்த அறைக்கு அழைத்து செல்லப்பட்டாள். அப்போது மேடா நானே உன்னை கவனிக்கிறேன் என்று கூறினேன். நான் அங்கு சென்று பெண்ணே நீ எப்படியிருக்கிறாய் என்று கேட்டேன். அவள் கேட்டாள், "எப்படி இருக்கிறீர்கள், சகோதரர் பிரான்ஹாம்?" "ஓ, இன்று காலை எனக்கு ஒரு மோசமான மயக்கம் வருகிறது" என்று கூறினார். நான் அவளிடம் ஆமாம் பெண்ணே நீ ஒரு உளவியல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தாய் என்று சொன்னாய் அல்லவா? அவளும் ஆம் என்று கூறினாள். அவள் சிந்திக்க முடியாத இடத்தில் வைத்து அவளுடைய சிந்தையை தெரிந்துகொள்ள......அங்கு எனக்கு முன்பு ஒரு கருப்பு நிற கார் ஒரு நபருடன் கடந்து சென்றதை பார்த்தேன். நீ எப்போதாவது கார் விபத்தை சந்தித்ததுண்டா என்று கேட்டேன். அதற்கு அவள் இல்லை என்று கூறினாள். நீ அப்படியே இருப்பாயானால்.... நல்லது அப்படியானால் ஏன் இங்கு ஒரு காரை காண்கிறேன், நான் கிளம்பியபோது அது என் தரிசனத்தில் சற்று நகர்ந்ததை கண்டேன். அதுதான் இங்கு இருக்கிறது. 19. அவளுக்கு திருமணம் நடைபெற்றபோது அவளது கணவர் வெளிநாட்டிற்கு பிரயாணமாக சென்றுவிட்டார். அவளுடைய கணவன் வெளிநாட்டில் இருக்கும்போது இவள் ஒரு பொன்னிற சிகையுள்ள ஆணுடன் வெளியில் சென்று தனது திருமண உடன்படிக்கையில் மீறி அவனுடன் வாழ்ந்தாள். அவள் திரும்பி வந்தபோது ஒரு ரயில் ஏறக்குறைய அவள் மீது மோதும்படி வந்தது. அது அவர்கள் இருவரின் உயிரையும் எடுத்திருக்கும். அவள் எதிர்பாராதவிதமாக உயிர் தப்பினாள். அப்போது நானும்.....அந்த தரிசனத்தைவிட்டு வெளியேறினேன். அப்போது அவள் அங்கிருந்த தரையின் மீது மயக்கமடைந்து விழுந்து அழுதாள். என் மனைவியும் அங்கு வந்தாள். அப்போது அவளும் நானும் பெண்ணே நீ ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியை என்று கூறினோம். அதற்கு அவள் சகோதரர் பிரன்ஹாம் நான் அந்த பாவத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே அறிக்கையிட்டு விட்டுவிட்டேன். நான் அந்த பெண்ணிடம் இங்கு கவனி! இந்த விஷயம் உனக்கும் அந்த மனிதனுக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரியும் என்று கூறினேன். அதற்கு அவள் அது சரியானது தான் என்று கூறினாள். 20. நான் அவளிடம் எந்த உளவியல் மருத்துவரும் இதை உனக்குள்ளிருந்து வெளிக்கொண்டு வர முடியாது. நீ தேவனிடம் வரவேண்டும் என்று கூறினேன். இப்போது நீ உன் கணவரிடம் சென்று அவருடன் ஒப்புரவாக்கிக்கொள் என்று கூறினேன். அதற்கு அவள் அது என்னால் முடியாது என்றும் தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் அப்படி செய்தால் என் குடும்பம் உடைந்துவிடும் என்று கூறினாள். அதற்கு நான் எப்படியிருந்தாலும் அது உடைந்து தான் போகிறது, ஏனெனில் நீ அவ்வாறு வாழப்போவதும் இல்லை. நீ முழுமையாக ஒரு பைத்தியம் ஆகிவிடுவாய். அதை உனக்குள்ளேயே வைத்திருக்க முடியாது. நான் சொன்னேன், அது மீண்டும் உன் வாழ்வை பின்னோக்கி திரும்ப செய்து உன் ஆத்துமா முடிவை சந்திக்கும். நல்லது, நான் தான் அதை தேவனிடம் அறிக்கையிட்டு விட்டுவிட்டேனே என்று கூறினாள். அதற்கு நான், நீ பாவம் செய்தது தேவனுக்கு விரோதமாக மட்டுமல்ல, நீ பாவம் செய்தது உன் கணவருக்கு விரோதமாக. நீ தனியாக திருமணமாகாமல் இருந்திருந்தால் அது வேறு சூழ்நிலை, ஆனால் நீ செய்தது உன் திருமண உடன்படிக்கையை மீறிய செயல் என்று நான் கூறினேன்..... அதற்கு அவளும் ஆம் சகோதரனே அப்படிதான் என்றாள். அதற்கு நான் சகோதரியே, இதற்கு வேறு எதுவும் செய்ய முடியாது. அந்த அறிக்கையிடப்படாத பாவம். அவர்கள் பெருமளவு எண்ணெய் இருக்கும் வரை உன் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். அவர்கள் அடிதடியில் இறங்கி உதைக்கவும் சத்தமிடவும் அங்கு குறுக்கிலும் நெடுகிலும் ஓடவும் அலறவும் உரக்க சத்தமிடவும் செய்வார்கள். அவ்வளவு தான் அந்த சாத்தான் அங்கேயே தங்கிவிடுவான். அவனுக்கு அங்கு எவ்வளவு காலம் தங்க உரிமை உண்டோ அதுவரையிலும் அவன் அங்கு தங்கி தனக்குரிய இடத்தை விடாது பற்றிக்கொள்வான். இருப்பான். உன்னால் இயலாது. நான் எல்லாவற்றையும் செய்துவிட்டேன். நான் இதை செய்ய முடியாது என்று கூறினாள். 21. இப்போதும் சகோதரியே நீ இங்கு வா என்று கூறினேன். தேவன் தனது கிருபையினால் உன்னுடைய துன்பங்களுக்கு காரணம் என்னவென்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்தினார். நீ உனது கணவரிடம் சென்று ஒப்புரவு செய்துகொள். அப்போது நீ சுகமடைவாய். நீ இதை செய்யாமல் போனாலும் நான் செய்யவேண்டியவகளை நான் செய்துவிட்டேன்.... அதற்கு அவள் நான் இதை தனியாக செய்துவிட முடியாது. இது என்னுடைய குடும்பத்தை உடைத்துவிடும். நான் தேவனுடைய ஊழியக்காரன். தேவன் எனக்கு என்ன செய்யும்படி கட்டளையிட்டாரோ அதை நான் செய்துவிட்டேன். அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். நான் அவளுக்கு பின்னால் பார்த்த போது அங்கு கதவோரத்தில் ஒரு உயரமான நீல நிற நிழல்போல் காணப்பட்ட மனிதனை (தரிசனத்தில்) கண்டேன். அவன் தலைமுடி பக்கவாட்டில் வாரபாட்டு வளைவுள்ள கருப்பு நிற முடியுடன் இருந்தது. உன் கணவர் கருப்பு நிற தலை முடியுடன் ஒல்லியான உயரமான மனிதன் தானே என்று கூறினேன். அதற்கு அவளும் ஆம் நீங்கள் சொல்லுகிறேபடியேதான் என்றாள். அவர் செவர்லெட் நிறுவனத்தில் வேலை செய்கிறார் அப்படித்தானே என்று கேட்டேன். அவளும் ஆம் என்றாள். அவரும் இதே விஷயத்தை உன்னிடம் அறிக்கையிட வேண்டும் என்று இருக்கிறார். அது என் கணவர் இல்லை, அவர் சபையில் ஒரு மூப்பராக இருக்கிறார். 22. அதற்கு நான் அவர் என்ன பதவியில் இருக்கிறார் என்பதைக் குறித்து அறிய எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் இதே விஷயத்தை உன்னிடம் அறிக்கையிட வேண்டுமென்று இருக்கிறார். அவர் இங்கிலாந்துக்கு வந்தபோது இதே தந்திரத்தை தான் கையாண்டார். அவர் எந்த இடத்தில இதை செய்தார் என்று அவளிடம் கேட்டேன். ஒரு பெண் இளம் சிவப்பு நிற உடையுடன் கருப்பு நிற முடியுடன் அவரும் அவளும் பணிபுரியும் அதே நிறுவனத்தின் ஒரு பச்சை நிற செவர்லெட் காரில் கடந்த மூன்று நாட்களுக்குள் சென்றதை பார்த்தேன். எனக்கு நான்கு தொலைபேசி அழைப்புகள் வந்தது. அதில் நீ சென்று அழை. அவரை உன்னுடன் அழைத்துக்கொள். நீங்கள் எல்லோரும் ஒரு இடத்திற்கு சென்று அந்த குழந்தைகளின் நலன் கருதி தேவனுடன் ஒப்புரவு செய்துகொள்ளுங்கள். நான் வெளியில் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனுக்காக ஜெபிப்பதற்கு சென்றேன். அவளும் அவரை அழைத்து சில நேரங்களுக்குள்ளாக அங்கு வந்து சேர்ந்து விட்டாள். இருவரும் அங்கு தங்கள் கன்னங்கள் மீது கண்ணீர் வடிய நின்றிருந்தனர். அவளும் அவரை அழைத்தாள். அவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு காரில் சந்தித்தனர். அந்த கும்பலில் இருந்த மற்றவர்கள் அவர்களை அதே காரில் விட்டு சென்று விட்டனர். அவள் முதலில் தனது பாவத்தை அறிக்கையிட்டு விட்டாள். அப்போது அவர் நீ இந்த குற்றத்தை நீண்ட காலங்களாக உன் மனதில் வைத்திருக்கிறாய் என்று கூறினார். 23. ஆம் என்று பதிலுரைத்தேன். இதைக்குறித்து என்னிடம் கூறிய நபர் நேற்றைக்கு முந்தின நாள் நீ அந்த பெண்ணுடன் ஒன்றாக இருந்ததாகக் கூறினார். அதற்கு அவன் நீ எங்கே இருந்தாய் என்று கேட்டான். அதற்கு அவளும்.....அவன் மேலும் தேனே அது உறுதியாக உண்மையே. இன்றிரவு கூட்டத்தில் மக்கள் இருப்பார்கள். அநேக சாட்சிகளும் இருக்கும், ஆகவேதான் இது உறுதியாக உண்மையானது என்று கூறினேன். நீ என்னை மன்னிப்பாயானால் நானும் உன்னை மன்னிப்பேன். நாம் இருவருமே தேவனிடம் மன்னிப்பு கேட்போம். நமது பிள்ளைகளை ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியர் போலவும் சபையின் மூப்பர்கள் போலவும் வாழ செய்வோம். 24. அவர்கள் மீண்டும் தங்கள் கரங்களை ஒருவர் மீது ஒருவர் போட்டுகொண்டு கிட்டே வந்தனர். என்னுடைய மனைவி சொன்னாள், "கண்டிப்பாக-கண்டிப்பாக அவர்கள் திரும்பி வரமுடியுமா?" ஆம், அவர்கள் நிச்சயமாக திரும்பவும் வருவார்கள் ஏனெனில் அவள் எப்போதும் நிம்மதியாக இருப்பதற்கு இதுவே அவளுடைய ஒரே நம்பிக்கை. அவர்கள் திரும்பவும் தங்கள் சர்வாயுதங்களுடன் அங்கு சென்றார்கள். நான் கூறினேன் இப்போது நிலைமை வேறு தேவனுடைய கிருபையினாலும் தேவனுடைய வார்த்தையின் அனுமதியுடனும் சாத்தான் உங்களைவிட்டு ஓடிவிடுவான். அதுதான் சரியானது. அங்கே அவனும் அவளை விட்டு பிரிந்து போய்விட்டான். அவள் இப்போது இண்டியானாவின் நியூ அல்பானியில் ஒரு மகிழ்ச்சியான பெண்ணாக இருக்கிறாள். இப்போது அவளும் அவளது கணவரும் ஒரு வெற்றியான வாழ்க்கை வாழ்வதாக சாட்சி கூறுகிறாள். 25. நீ இப்போது போதுமான எண்ணையை அவள் தலைமீது ஊற்றி அபிஷேகம் செய்ய முடியவில்லை. உன்னால் அவளை காலின்கீழ் போட்டு மிதிக்கவும் முடியாது. உரக்க சப்தமிடவும் முடியாது. நீ எவ்ளவு அதிக சத்தமாக கத்தினாலும் சாத்தானால் ஒன்றும் செய்ய முடியாது. அவன் அதை கவனித்து கேட்க மாட்டான். அது சரியானதுதான். ஆனால் அவன் விசுவாசத்தை அறிந்து கொள்ள முடியும். ஆமாம் ஐயா. அவனால் சத்தியம் எங்கு இருக்கிறது என்றும் சத்தியத்தை அறிந்துகொள்ளவும், விசுவாசத்தை அறிந்து கொள்ளவும் முடியும். உனக்கு ஏதாகிலும் ஏற்படக்கூடாது என்று நான் உன்னை சமீபத்தில் இருந்து கவனித்துகொண்டு இருக்கிறேன். இன்று இரவு இதேபோல்தான் செய்யப்போகிறோம். நாம் மக்களுக்காக அவர்கள் மீது கைகளை வைத்து ஜெபிக்கப் போகிறோம். அதே வழியில்தான் உனக்கும் செய்யப்போகிறோம். ஆகவே நீ இந்த பீடத்திற்கு வருமுன் உன் பாவங்களையெல்லாம் கர்த்தாவே என்று அறிக்கையிட்டு உன் வாழ்க்கையில் ஏதாகிலும் இருக்குமானால் அவைகளை தேவனுடன் சரிசெய்துகொண்டு வரவும். நீ எவ்வளவு காலங்கள் அறிக்கையிடப்படாத பாவங்களை உனக்குள் வைத்திருக்கிறாயோ அதுவரையிலும் எல்லாமே தடையாகவே இருக்கும். 26. உன் வாழ்கையில் நீ செய்ய வேண்டி இருந்த ஏதாகிலும் நீ செய்யாமல் போய் இருக்கலாம். நீ செய்யக்கூடாது என்று எண்ணியதை செய்திருக்கலாம். இவைகளில் எதுவாக இருந்தாலும் அவைகளை அறிக்கையிட்டு தேவனுடன் நேர் படுத்திக்கொள். தேவனிடத்தில் நம்பிக்கையாக இரு அவரை ஏற்றுக்கொள். தொடர்ந்து அப்படியே செய். ஆமென் எல்லாம் நல்லது. மறந்துவிடாதீர்கள், நாளை மதியம் அல்லது நாளை இரவு நாம் ஜெபிக்க வருவோம். இப்போது முதல் நாளை பகல்வரை எத்தனை பேர்கள் நான் குறைந்தது அரைமணி நேரமாகிலும் நாளை ஆராதனையின் முழுமையான வெற்றிக்காக ஜெபிக்கப்போகிறோம் என்று கூறப்போகிறீர்கள்? நீ இதை என்னுடன் செய்யக்கூடுமா? நான் இன்றைக்கும் நாளைக்கும் இடையில் நாளை பகல் நடைபெறும் கூட்டத்தின் முழு வெற்றிக்காக ஜெபிக்கப்போகிறேன். அது ஒரு முழுமையான கூட்டம். ஒவ்வொரு பாவியும் இரட்சிக்கப்படுவார், ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவர், ஒவ்வொரு முடவரும் சுகமாக்கப்படுவர், ஒவ்வொரு வியாதியஸ்தரும் சுகமாக்கப்படுவர். இது ஒரு அதிசயமான கூட்டம்தானே? நாம் இதேயே நம்புவோம். 27. இப்போது வேதவாசிப்புகாகவும் அதன் பின் ஜெப வரிசைக்காகவும் யாக்கோபு 2 ஆம் அதிகாரம் 21 ஆம் வசனத்தை வாசிப்போம். "நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப் பட்டதென்று காண்கிறாயே. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென் னப்பட்டான். ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே." 28. உங்களில் எத்தனை பேர்களுக்கு விசுவாசம் இருக்கிறது? கர்த்தருக்கு சாட்சியாக தங்கள் கரங்களை உயர்த்தவும். நீங்கள் விசுவாசத்தை கிரியையில் காட்ட ஆர்வம் தெரிவிக்கவில்லை என்றால் நீங்கள் விசுவாசம் வைக்க வேண்டாம். உங்களுடைய விசுவாசம் கிரியை இல்லது இருக்குமானால் செத்ததாய் இருக்கிறது. இன்று இரவு பரிசுத்த ஆவியானவர் அந்த கட்டிடத்தில் அசைவாடும் போது முதல் முயற்சி எடுக்கும் பக்கத்தில் இருப்போம். நமது முழு இருதயத்துடன் இதை நம்புவோமாக. நாம் ஓவ்வொருவரும் இன்று இரவு இந்த கட்டிடத்தில் ஜெபிக்கலாம். முதலாவது கூட்டம் நன்றாக சுமூகமாக நடக்கட்டும். பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தில் அசைவாடும் போது சவால் விட்டு, மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி இடம் சென்று, தேவனை உங்கள் முழு இருதயத்துடன் நம்புங்கள். 29. ஒரு இனிமையான சம்பவம், இதை நான் மீண்டும் கூற விரும்புகிறேன். நேற்று இரவு நானும் என் மனைவியும் ஒரு உணவு சாலையில் சாப்பிட்டுகொண்டு இருந்தோம். அப்போது நாங்கள் சாப்பிட்டதற்கான பணத்தை யாரோ ஒருவர் செலுத்திவிட்டார். நான் அதனை பாராட்டுகிறேன். சகோதரர் போஸ் இன்று இரண்டு அன்பான உணவு டோக்கன்களை கொடுத்தார். அது யாரோ ஒருவர் காணிக்கையாக கொடுத்திருந்தார். இதையும் நான் பாராட்டுகிறேன். இதை நான் மறக்கவும் மாட்டேன். அதன்பின்பு இன்று மதியம் ஒரு அருமையான சம்பவம் நடைபெற்றது. ஒரு கண் பார்வையற்ற சிறு பெண் இந்த கட்டிடத்தில் வந்து அமர்ந்தாள். ஆராதனை நடந்துகொண்டிருந்த சமயம் ஒரு ஒளியானது அவளது கண்களின் மீது பட்டது. இன்று உணவு விடுதியில் அந்த பெண் ஒரு சிறிய கிறிஸ்துவின் படத்தை ஞாபகார்த்தமாக கொடுத்தார். 30. தேவனே பிதாவே மீண்டும் ஒருமுறை தயவு கூர்ந்து தாரும். இன்றிரவு மீண்டும் அதே சம்பவம் நடைபெறட்டும். என்னுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து நாங்கள் ஜெபிக்கும்போது தேவனே ஆசீர்வதித்திடும். கர்த்தாவே நீரே தேவனுடைய குமாரனாய் இருக்கிறீர். இங்கு ஆண்களும் பெண்களும் இன்று இரவு மரித்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் உம்மையல்லாமல் சுகமே ஆக முடியாது. அவர்கள் வாசலருகே படுத்துக்கிடந்த தொழு நோயாளியைப் போல் இருக்கின்றனர். "குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன? பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொன்னார்கள். ஒரேயொரு வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் விசுவாசத்தினாலே சென்று அதை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. தேவனே அவர்களுக்கு என்ன வெகுமதியைக் கொடுத்தீர்? அவர்கள் தங்கள் ஜீவனை மட்டும் காத்துக் கொள்ளவில்லை முழு சமாரியவையுமே காப்பாற்றினார்கள். 31. ஓ இயேசுவே இன்று் இரவு மக்கள் தங்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லையென்று அறிந்து கொள்ள நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் கீழே சத்துருவின் முகாமுக்கு போக வேண்டுவதில்லை. அவர்கள் இன்றிரவு பிதாவின் சிங்காசனத்தண்டையில் அவர் பாத தண்டையில், அவர்கள் எதிர்பார்க்கப்பட்டு இருந்த அந்த இடத்திற்கு வரட்டும். அங்கு வந்து தாங்கள் சுகம் பெற்றதற்கும், இரட்சிப்பு பெற்றதற்கும், மீட்கப்பட்டதற்கும் உமக்கு நன்றி செலுத்தட்டும். இவைகளை தாரும் கர்த்தாவே. இன்று இரவு உமது ஆவியை ஒவ்வொருவர் மீதும் அனுப்பும் கர்த்தாவே. அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை தவிர வேறு எதையும் காணாமல் இருக்க தடையாக இருக்கும் மறைவை நீக்கியருளும். அவர்கள் மேலான பலிகளையெல்லாம் காணட்டும். எங்களுடைய விசுவாசக் கண்களாலே அங்கே எங்கள் பாவ கடனுக்கான கிரயம் செலுத்தப்பட்டதைக் காண்கிறோம். ஓ தேவனே நாங்கள் விசுவாசம் உண்டென்று அறிக்கையிட்டு அதே நேரத்தில் கிரியைகளினால் வெளிப்படுத்த பயந்து கொண்டிருக்கும் எங்களுக்கு கிரியைகளினாலான விசுவாசத்தை தாரும். 32. இன்றிரவு ஆண்களும் பெண்களும் பல இடங்களிருந்து வந்து எல்லா சுகவீனங்களிலிருந்து சுகம் தாரும். பிசாசுகள் விரட்டப்படட்டும், உம்முடைய ஆவியானவர் அவர்களுக்குள் வந்து முற்றிலுமாக பொறுப்பெடுத்து எல்லா சந்தேகங்களையும் நீக்கி ஒவ்வொரு இருதயத்திலும் பூரணமான வெற்றியைக் கட்டளையிடும். கர்த்தாவே நாங்கள் இங்கு இதனுள் செல்லும்போது அந்நாட்களில் கூறியதுபோல் "அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளக்கிக் காட்டின பொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று.....கூறலாமா? இவைகளை அவருடைய நாமத்திற்காகவும் மகிமைக்காகவும் கேட்கிறோம். ஆமென் இப்போதும் அநேக பழைய ஜெப விண்ணப்ப அட்டைகள் இங்கு இருக்கின்றன. முதலாவது அந்த ஜெப விண்ணப்ப அட்டைகளை முடிந்தவரை வரிசைப்படுத்துவோம். நாம் அந்த குழு ஜெபிப்பதற்கு மற்றொரு வரிசையை நிறுத்துவோம். அந்த ஜெப விண்ணப்ப அட்டைகளை தொடர்ந்து கொண்டு வந்து கொடுத்துக்கொண்டே இருங்கள். ஒரு வேளை எனக்கு களைப்பு ஏற்படுமானால் தொடர்ந்து வியாதியஸ்தருக்காக ஜெபித்து எனக்கு இங்கு சில உதவியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு அர்ப்பணிப்பு ஏற்படும்வரை அல்லது தேவன் இந்த இடத்திற்கு எதை கொண்டுவருகிறாரோ அதுவரையிலும் நாம் தேவனிடம் ஒப்படைப்போம். 33. இப்போது நாம் D அட்டையிலிருந்து துவங்கிவிட்டோம் என்று நம்புகிறேன். ஜெப அட்டை D யை வைத்திருப்பவர்கள் உங்கள் கைகளை உயர்த்துங்கள். எல்லாமே சரியாக இருக்கிறது. ஜெப அட்டை D 1 யாரிடம் இருக்கிறது? D 1 என்ற அட்டை இந்த கட்டிடத்தினுள் இருக்கிறதா? நான் அதிகம் தூரத்திலிருந்து துவங்கிவிட்டேன் என்று எண்ணுகிறேன். D 1 என்ற அட்டை இங்கு யாரிடமும் இல்லை. நான் அநேகமாக அதிகம் பின்னோக்கி சென்றுவிட்டேன் என்று எண்ணுகிறேன். ஆம் அவர்கள் D1 முதல் 10 வரையுள்ள அட்டைகளை வைத்துள்ளார்கள். எவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்க்கு, எழுந்து நிற்கவும். நாம் அவர்களை இந்த சுவர் ஓரம் அல்லது எங்கேயாவது முழு வரிசையும் இங்கே நிற்கும்வரை இதே போல் நிற்க செய்வோம். அதன் பின்பு நாம் அடுத்த குழுவின் ஜெப அட்டையிலிருந்து துவங்குவோம். 34. D 1 முதல் 10 வரை நாம் அங்கிருந்துதான் துவங்கியுள்ளோம் என்று எண்ணுகிறேன். எல்லாமே சரியானதுதான். D 1 முதல் வரை ஜெப அட்டை உள்ளவர்கள் உடனடியாக எழுந்து நிற்கவும். உங்கள் அட்டையின் பின்புறம் பார்க்கவும். இதை மேம்படுத்த உதவவும்! யாராவது அந்த பெண்ணுக்கு, உங்களால் முடியும் என்றால் உதவி செய்யவும். ஒவ்வொருவரும் சுற்றிலும் பார்த்தார்கள். வரிசைப்படுத்துபவர்கள் கூடியவரை உடனே உங்கள் இடத்திற்கு வரவும். D 10 முதல் D 20 வரை வரிசைப் படுத்த உதவி செய்யவும். உனக்கு இந்த அட்டை கிடைத்துவிட்டது. அந்த மனிதனுக்கு அட்டை கிடைத்துவிட்டதா? ஆம் அது சரியாக இருக்கிறது. 20 முதல் 30 வரை. D 20 முதல் D 30 வரை, அது சரியானதுதான். 30 முதல் 40 வரை உடனே வரிசைக்கு வரவும். D 30 முதல் 40 வரை 40 முதல் 50வரை, இப்போது உங்களுக்கு அருகில் இருப்பவர்களின் அட்டையை சரிபார்க்கவும். அவர்கள் அதை கண்டுபிடிப்பார்கள். அவர்கள் அனைவரும் வரிசையில் நிற்க வைத்த பின்பு D 40 முதல் 50 ம் 50 முதல் 60 வரை. நீங்கள் மோசமான நிலையிலுள்ள முடவராக இருந்தால், உங்களுடைய எண் அழைக்கப்பட்டால் உங்கள் இடத்திலேயே இருங்கள். உங்களுக்கு உதவி நாங்கள் சிலரை அனுப்புவோம். 35. 50 முதல் 60 வரை என்ன ஆனது? நான்.......60...60? 60 முதல் 70 வரை D 60 முதல் 70 வரை. நீங்கள் அவைவரும் வெளியே வந்திருப்பீர்களானால் இந்த வழியாக வரவும். வரிசையானது இதேபோல் 60 முதல் 70 வரையிலும் நிறுத்தப்பட வேண்டும். சில பணியாளர்கள் உங்களை உங்கள் இடத்தில் நிற்க செய்வார்கள். இதை நாங்கள் ஏன் செய்கிறோமென்றால் எங்கே என்ன நடக்குமென்பது எங்களுக்கு தெரியாது. பரிசுத்த ஆவியானவர் ஒரு சிலவற்றை செய்யப்போகிறார். நீங்களே பாருங்கள். அவர் இந்த வரிசையை சில நொடிகளில் நிற்க வைக்ககூடும். கடந்த எட்டு வருடங்களில் எங்களுக்கு அதிக அனுபவம் உண்டு. 70 முதல் 80, D 70 முதல் 80, அதுதான் சரியானது. அனைவரும் இந்த வழியில் வரவும். உங்களுடைய அட்டைகளின் முறைப்படி வரிசையை நிற்க செய்யவும். 70 முதல் 80, 80 முதல் 90, இதேபோல் செய்யவும். 36. (சகோதரர் பிரன்ஹாம் ஒரு சிலரிடம் பேசுகிறார்) சகோதரர் ஆஸ்பரன் ஒரு சில வார்த்தைகள் பேசுவார். (சகோதரர் ஆஸ்பரன் சுகம் பெறுவது எப்படி என்பதை விளக்குகிறார்.) சகோதரர் ஆஸ்பரன் அவர்களே மிகவும் நன்றி. அது உண்மையானது. அதுதான் வேதவாக்கியம். அது முழுமையாக இருக்கிறது. இது சத்தியம் இல்லை என்று யாருமே சொல்ல முடியாது. அதுதான் சத்தியம். பாருங்கள். நீ உன் விசுவாசத்தை கிரியைகளில் கொண்டு வர பயப்படுகிறாய் நீ எனக்கு விசுவாசம் உண்டு. ஆனால் அது கிரியைகளில் காட்ட முடியவில்லை என்றால் உனக்கு விசுவாசமும் இல்லை என்பது தான் உண்மை. பாருங்கள். நீ நம்ப வேண்டியுள்ளது. இந்த வரிசையில் நிற்கும் அனைவரும் அநேகமாக நூறு பேர்கள் இருக்கலாம். இந்த பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து இருப்பவர்களில் எத்தனை பேர்களுக்கு ஜெபம் செய்ய வேண்டுமென்று இருக்கிறீர்கள்.? நான் உங்கள் கரங்களை எல்லா இடங்களிலும் பார்க்க முடியுமா? ஓ மேலும் ஆயிரம் பேர்கள் ஜெபிக்க வேண்டுமென்று இருக்க கூடும், உங்களில் ஒவ்வொருவருமே சுகம் பெறக்கூடும் பாருங்கள். தேவனிடம் நம்பிக்கையாக இருங்கள். 37. இப்போதும் சகோதரர் ஆஸ்பர்ன் அவர்களே! இவர் வார்த்தைகளை விளக்கி கூறி மனதில் தங்க வைப்பார். நீ அதை நம்பாமல் இருக்க முடியாது. அது அவருடைய வரம். தீர்க்கதரிசனம் சொல்லுவது என்னுடய வரம், அவ்வளவுதான். கண்ணும், காதும் மற்றும் அவைகளை போல சரீரத்தில் எல்லாம் ஒன்று சேர்ந்து வேலை செய்கிறது. மற்றும் தேவனுடைய சரீரம் அது போல ஒன்று சேர்ந்து வேலை செய்யும் போது, ஏன் அது உன்னை சந்தோஷத்துக்குள்.................வரை ஆழ்த்தும். மற்றும் இது கடைசி காலம் என்றும், கர்த்தர் இந்த அற்புதங்களை நமக்காக செய்துகொண்டிருக்கிறார் எனதை அறிந்துகொள்ளுங்கள். நீ சந்தோஷமடையதான் வேண்டும், நீ இந்த கட்டிடத்திற்கு வெளியில் சென்று சந்தோஷத்தில் கூக்குரலிடு. நீ அப்படித்தானே எண்ணுகிறாய்? ஆம் உண்மையிலேயே! அது சரியானதுதான். அந்த பெண்ணை இங்கு அழைத்து வாருங்கள். இப்போதும் ஒரு சில நேரங்களுக்குள் வரிசையில் இருப்பவர்கள் கிளம்பப்போகிறார்கள். இப்போது தேவனுடைய தூதன் இங்கு இருக்கிறார் என்பதை நான் நிச்சயப்படுத்த வேண்டும். மக்கள் கடந்து செல்லும்போது நான் வெறுமனே ஜெபித்துக்கொண்டு மட்டும் இருக்கமாட்டேன். ஆனால் அந்த வரிசையில் உள்ள நூறு பேர்களையும் பகுப்பாய்வு செய்ய ஒவொருவருக்கும் அநேகமாக நான்கு அல்லது ஐந்து நாட்கள் கூட்டங்கள் நடத்த வேண்டியிருக்கும். தேவன் ஒரு காரியத்தை வெளிப்படுதுவாரானால் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவார். அது அவரால் முடியாதா? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கின்ற அவர் இங்கு இருக்கிறார். அவருடைய ஆசீர்வாதம் நம்முடன் இருக்கிறது. நீங்கள் இதை நம்புகிறீர்களா? 38. இப்போதும் பெண்ணே நீ இங்கு வந்ததினால் இதை நம்புகிறாயா? உங்களுக்கு முடியும் என்றால் அந்த இசை எங்கிருந்து வருகிறதோ அங்கிருந்து தொடரட்டும். அதுவும் சரியானதாக இருக்கிறது. அது நல்லது. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு மனதுடன் கிறிஸ்துவில் நிலைத்தும் இருக்கிறீர்கள். அவர் ஒரு வேளை இங்கு இந்த பூமியில் இன்றிரவு அவர் எனக்கு தந்த கோட்டை அணிந்துக் கொண்டு நமது மத்தியில் இருப்பாரேயானால் எப்படி இருக்கும்? அப்பொழுது அவர் இங்கு வருவார். இங்கு ஒரு பெண்மணி நிற்கிறாள். ஏன், என்னுடைய வாழ்வில் அவளை பார்த்ததே இல்லை. இயேசு, அவர் என்ன செய்வார். அவர் அவளை குணப்படித்த முடியவில்லை. எத்தனை பேர் இது ஒரு சத்தியம் என்று அறிவீர்கள்? இயேசு அவளை சுகப்படுத்த முடியவில்லை. அவர் ஏற்கனவே இதை செய்துவிட்டார். அவர் இதை செய்ய முடியவில்லை. இப்போது சில நிமிடங்கள் காத்திரு, நான் கீழே வந்து உன்னை இரட்சித்துக்கொள்ளுகிறேன். ஏனென்றால் நீ பலிபீடத்தினருகில் ஒரு பாவியாக இருக்கிறாய். அவர் ஏற்கனவே உன் பாவத்திற்காய் மரித்தும் தன் பிதாவின் வலது பக்கத்தில் உனது கிரியைகள் மீது மத்தியஸ்தம் செய்ய இருக்கிறார். அது உன் உணர்வுகள் மீது அல்ல, நீ செய்ய வேண்டிய கிரியைகள் மீது. 39. நீ பத்து வருடங்களுக்கு முன்பாகவே இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்று சொல்லுவாயானால் இல்லை, நீ 1900 ஆண்டுகளுக்கு முன்பு இரட்சிக்கப்பட்டு விட்டாய். இன்று இரவில் இதை நம்புகிறாயா? இது ஒன்றுதான் நீ சுகமடையாமல் போனதற்கு காரணம். இப்போதும் அவர் ஒரேயொரு கிரியை மட்டும் இந்த பூமியில் இருந்தபோது செய்ததைப்போல் செய்யக்கூடும். "என் பிதாவை அல்லாமல் நான் எதையுமே செய்யக்கூடாது" இன்றிரவு அங்கு ஒரு புதிய பங்களிப்பும், புதிய பார்வையாளர்களும் இருக்கும் இடத்தில், உனக்கு இது ஒரு முதல் அனுபவமாக கூட இருக்கலாம். இங்கு ஏற்கனவே என்னுடைய கூட்டங்களில் பங்கு பெறாத யாராகிலும் ஒருவர் இருக்கிறார்களா? உங்கள் கைகளை உயர்த்துங்கள். ஓ அங்கு நூறு அல்லது இருநூறு கூட இருக்கலாம். இதில் ஒரு சிலரை மட்டுமே புரிந்து இருக்கக்கூடும். கர்த்தர் ஏதாவது ஒரு வழியில் நடத்துவார் என்பதை பாருங்கள். 40. இப்போதும் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து இந்த பூமியில் இருந்தபோது அவர் என்ன செய்யதார்? அவர் தன்னை ஒரு சுகமளிப்பவர் என்று கூறிக்கொள்ளவில்லை. அவர் தனக்கு பிதாவானவர் செய்யும்படி என்ன அவரது தரிசனத்தில் கட்டளையிட்டாரோ அதையே செய்கிறேன் என்றார். உங்களில் எத்தனைபேர்கள் இது வேத வசனம் என்பது தெரியும்? பரிசுத்த யோவான் 5: 19 சொல்கிறது, அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். ஒரு பெரிய முடவர்கள் நிறைந்த கூட்டத்தை அவர் கடந்து போனார். அவர் பெதஸ்தா குளத்தண்டையில் ஒருவரையும் சுகப்படுத்தவில்லை. அவர் அங்கு ஒரு மனிதன் படுக்கையின் படுத்து இருந்ததை பார்த்தார். பிதாவானவர் அதை அவருக்கு காண்பித்தார். அவருக்கு என்ன செய்ய வேண்டுமென்பது தெரியவில்லை. அங்கிருந்த மக்கள் "ஏன் உம்மால் கூடாமல் இருந்தது" வேறொரு முறையில் சொல்லப்போனால் அனைவரையுமே சுகப்படுத்த அவரால் கூடாமல் போனது? இந்த விமர்சனங்கள் பல நாட்களாக அவர்களிடையே இருந்தது. ஒருநாள் ஒரு துணியை எடுத்து அவரது கண்களை சுற்றி கட்டிவிட்டு, அவரது தலையில் உதைத்து, அந்த துணியை கையில் பிடித்துக்கொண்டு நீ ஒரு தீர்க்கதரிசியானால் இப்போது உன்னை அடித்தது யார் என்று சொல்லு பார்ப்போம். உங்களுக்கு அந்த சிலுவைக்காட்சி நினைவில் இருக்கிறதா? "நீ தீர்க்கதரிசியானால் உன்னை அடித்தது யாரென்று சொல்லு பாப்போம்" அவர் தமது வாயை திறக்கவே இல்லை. 41. அது இல்லை, அவர் ஒரு மேடை நாடகம் காட்டவும் இல்லை. அது ஒரு கோமாளி காட்சியும் இல்லை. அது நிச்சயமாகவே உண்மையாகவே பிதா என்ன கட்டளையிடுகிறாரோ அதையே அவர் செய்கிறார். ஒருவேளை அவர் தம்மை அடித்தது யார் என்று அறியாமல் இருக்கக்கூடும். ஆனால் பிதா அதை அறிவார். அவர்களுடைய எண்ணங்களை அவரால் அறிந்திட முடிந்தது. கிணற்றண்டையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் அவர் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அவளிடம் அவளுடைய பிரச்சினைகளின் காரணம் என்ன என்பதை விளக்கி கூறினார். "நீ போய் உன் புருஷனை அழைத்து வா" என்றார். பிலிப்பு நாதானுவேலுடன் அவரிடம் வந்தபோது "நாசரேத் ஊரிலிருந்து ஓர் நல்ல செய்தி உண்டா" என்று ஆச்சரியத்துடன் கேட்டான். அதற்கு அவன் "நீ வந்து பார்" அவன் வருவதை பார்த்து "அவர் உத்தம இஸ்ரவேலன் வருகிறான்" என்றார். அது ஏன் அவனை ஆச்சரியபட வைத்தது? "நீர் என்னை எப்படி அறிவீர் போதகரே" என்று கேட்டான். பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்னே நீ அத்தி மரத்தின் கீழ் இருக்கும்போதே நான் உன்னை கண்டேன்? என்றார். 42. இன்றிரவு அவருடைய சபையில் அதே இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து வசிப்பாரானால் அதே கிரியைகளைத்தான் இப்போதும் செய்வார். அதனால் தான் நான் செய்கின்ற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள் என்று சொன்னார். அது உண்மைதானே! இதோ உலகத்தின் முடிவுப்பரியந்தம் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். சபையானது இவைகளையெல்லாம் மறந்துவிட்டது. வேத சாஸ்திரம் இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிறது. ஆனால் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். இன்றும் நம்மிடையே இருக்கிறார். யெகோவா என்னும் நாமமுடைய தேவன் ஒருமுறை அக்கினி ஸ்தம்பத்திலும், மற்றொரு முறை குமாரனாக இயேசுவின் சரீரமாகவும், இந்த முறை ஸ்தம்பத்திலிருந்து ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்து தம்மை வெளிப்படுத்தினார். இப்போது பாவிகளிடம் மறுபடியும் பிறக்கும் அனுபவத்தினாலும் தம்மை வெளிப்படுத்தினார். தேவன் அக்கினியிலும் அவருடைய குமாரனிலும், அவருடைய மக்களிலும் அதே தேவன் தான் இருக்கிறார். தேவனிடம் நம்பிக்கை உள்ளவர்களாய் இருங்கள். இதுவே சரியானது. 43. நீங்கள் ஒவ்வொருவரும் இப்போது இருக்கும் பக்திவிநயத்துடன் இருக்கும்போது பெண்ணே இங்கே வரவும். இன்றிரவு தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து இங்கே நம்முடன் இருக்கிறார் என்று உன் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறாயா? நீ என்னை நோக்கி பார். நீ என்னை நோக்கி பார்க்கும் போது, பேதுருவும் யோவானும் வாசலை கடந்து செல்லும்போது "வெள்ளியும் பொன்னும் எங்களிடத்தில் இல்லை" என்னை நோக்கி பார் என்று அவர்கள் கூறியபோது, அவன் ஏதோ ஒன்றை அவரிடமிருந்து பெற விரும்பி அவர்களை நோக்கி பார்த்தான். அவர்கள் என்ன செய்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அவனிடம் என்ன வகையான விசுவாசம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பினார்கள். எலியா கீழே இறங்கி வந்தபோது......அவர்கள் அசீரியர்களிடம் யுத்தம் செய்ய சென்றிருந்தார்கள். எலியா அங்கு ஆகாபின் குமாரனை பார்த்தான். நீ ஏன் உன் சொந்த தெய்வத்திடம் போகவில்லை? உன் தாயின் தெய்வத்திடம் ஏன் போகக்கூடாது? ஏன் என்னிடம் வந்தாய் என்று கேட்டான். 44. அவன் எல்லாவற்றையும் குறித்து அறியாதவனாய் இருந்தான். நான் ஒருவேளை யோசபாத்தின் வருகையை விரும்பாமல் இருந்தால் நான் உன்னை பார்த்திருக்கப் போவதில்லை. இப்போதும் அந்த தீர்க்கதரிசி "நான் உன்னை பார்க்கவும் இல்லை" இருப்பினும் ஏதாகிலும் ஒரு இசையை இசைக்க துவங்கியபோது தேவனுடைய கரம் தீர்க்கதரிசியின் மீது இறங்கியது. அவர் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய முடிந்தது. அவர் இந்த இரவிலும் அதே தெய்வமாகவே இருக்கிறார். அதை நீங்கள் விசுவாசியுங்கள். நாம் இங்கு அந்நியர்களாக இருக்கிறோம். அப்படித்தானே! நமது வாழ்க்கையில் முன்பு ஒரு போதும் சந்தித்தது இல்லை. நீ இங்குள்ள பார்வையாளர்கள் மத்தியில் ஒரு பெண், உன்னிடத்தில் ஜெப அட்டை இருக்கிறது. நீ இங்கு மேடைக்கு வரவும். இப்போதும் இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தது உண்டானால் நீ எப்படியிருந்தாய் என்பதையும் இப்போது என்னவாக இருக்கிறாய் என்பதையும் நீ எப்படி இருக்க போகிறாய் என்பதையும் தெரிவிப்பார். அது உண்மைதானே! நிச்சயமாகவே! அவரிடத்தில் எந்த ரகசியமும் இல்லை. 45. நீ எப்போதாவது என்னுடைய சிறிய புத்தகத்தை வாசித்ததுண்டா? அது தீர்க்கதரிசி ஆப்ரிக்காவுக்கு செல்லுகிறார் என்ற புத்தகம். அல்லது அதுபோன்று ஒரு சிலவைகள். நீங்கள் எப்போதாகிலும் அந்த தேவ தூதனின் படத்தை பார்த்ததுண்டா? அவர் அந்த கிணற்றண்டையில் அந்த பெண்ணிடம் பேசியதைப்போல நான் உன்னிடம் பேச விரும்புகிறேன். நீ சில பிரச்சினைகளுடன் இருக்கிறாய். சமீபத்தில்தான் அறுவை சிகிச்சை செய்துள்ளாய். அது உனக்கு பின்னாலிருந்தோ அல்லது இந்த வழியை சுற்றியோ அல்லது கீழாகவோ அது ஒரு கத்தி, ஓ இது ஒரு பித்தப்பை அறுவை சிகிச்சை. இரண்டு மருத்துவர்கள் அறையில் இருந்தார்கள். அவர்கள் அந்த பித்தப்பையை எடுத்தார்கள். நீ வெகு நாட்களாக சுகவீனமாகவே இருக்கிறாய். எப்போதுமே வியாதியாகவே இருக்கிறாய். அவர்கள் அந்த வேலையை சரியாக செய்து முடிக்கவில்லை. இயேசு கிறிஸ்து இதை செய்யக்கூடும். நீ இதை விசுவாசி. நீ செல்லலாம். அது இப்போது சரியாகிவிட்டது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே இன்றிரவு உன் கண்கள் சுகமடையப்போவதை நீ ஏற்றுக்கொள்வாயா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இன்று இதை பெற்றுக்கொள்ளுவாய். இப்போது நீ செல்லலாம். இயேசுவின் நாமத்தினாலே உன்னை ஆசீர்வதிப்பாராக. 46. எல்லாம் சரி, பெண்ணே இங்கு வா. உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிப்பீர்களா? இயேசு கிறிஸ்து இங்கு இருக்கிறார் என்று நம்புகிறீர்களா? உங்களுடைய இருதய பிரச்சனையை தேவன் சுகமாக்குவார் என்பதை நம்புகிறீர்களா. அப்பொழுது அவர் அப்படியே செய்வார். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் செல்லுங்கள். அவர் குணப்படுத்தி இருக்கிறார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. பெண்ணே நீ இங்கு வா. உன் முழு இதயத்துடன் விசுவாசிக்கிறாயா? தேவனுடைய குமாரன் உன்னை முழுமையாக சுகப்படுத்த இங்கு இருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறாயா? அவர் உன்னை முழுமையாக சுகப்படுத்திவிட்டார் என்பதை நீ விசுவாசி. உன்னுடைய பிரச்சினை என்ன? உன்னை சுற்றிலும் எப்போதும் இருள் சூழ்ந்துகொண்டு இருக்கிறது. இது பேய் என்ற உணர்வு. இது பதட்டமான நிலை. இது நீ வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையின் நேரம்தான் காரணம். 47. பிசாசானவன் நீ உன் மனதை இழந்துவிடுவாய் என்று கூறுகிறான். அவன் ஒரு பொய்யன். நீ சுகமடைந்துவிட்டாய் நீ இந்த மேடையை விட்டு செல்லலாம். அது சரியானதுதான் நீயும்.....தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ எழுந்து உன் கண் பார்வையை பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்து உன்னை பூரணமாக சுகப்படுத்துவாராகப். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நாம் அனைவரும் கர்த்தரை போற்றுவோமாக. சபையார் கர்த்தரை போற்றுவோமாக என்று சொல்லுவார்களாக. பெண்ணே நீ இங்கு வா நீ, உன் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறாயா? நீ அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறாய் என்பதை உன் முழு இதயத்துடன் விசுவாசிக்கிறாயா? அது சரியானதுதான். உனக்கு ஒரு........இது ஒரு வியாதியும் இல்லை. உன்னுடைய மூக்கில் ஒரு மெல்லிய சதை வளர்ந்து இருக்கிறது. அதனால் உனக்கு சளிக்காய்ச்சல் ஏற்படுகிறது. அது சரிதானே! இயேசு கிறிஸ்துவிடமிருந்து உனக்கு சுகம் கிடைத்தது என்பதை ஏற்றுக்கொள். ஆமென் நீ போய் இதைக்குறித்து சாட்சி கூறி தேவனை துதித்திடு. பெண்ணே நீ இங்கு வா. நீ உன் முழு இருதயத்துடன் விசுவாசி. நீ உன்னுடைய சிறுநீரகக் கோளாறு வியாதியிலிருந்து விடுவிக்கப்பட உன் முழு இருதயத்துடன் விசுவாசி. நீ உன் சிறுநீரக கோளாறிலிருந்து விடுபட விரும்புகிறாயா? இது உனக்கு அதிகமான பின் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது முடியும் நீ இதிலிருந்து விடுபட இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தாயானால் எல்லாம் கூடும். அவரை உன் மருத்துவராக ஏற்றுக்கொள். நீ இதை செய். நீ போகலாம். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக? ஆமாம் ஐயா நீ போய் உன் கைகளை அவள் மீது வைத்து அவள் சுகமடைவாள் என்பதை நீ விசுவாசி. மேலும் நீ எதைக் கேட்டாயோ அதை பெற்றுக் கொண்டாய். 48. என் சகோதரனே நீ உன் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறாயா? கர்த்தராகிய இயேசுவே நீர் இவரை சுகப்படுத்தும். கிறிஸ்து இயேசுவின் நாமத்தினாலே சுகப்படுத்தும், ஆமென் நீ சந்தோஷத்துடன் செல்லலாம் சகோதரியே இங்கே வா. நீ உன் முழு இருதயத்துடன் விசுவாசி. நான் ஒரு வார்த்தை சொல்லாமல் இருந்தால்...... நீ உன் இருக்கையில் அமர்ந்து இருந்தபோதே உன் நரம்புத்தளர்ச்சி உன்னை விட்டு போய்விட்டது. நீ இதை விசுவாசிக்கிறாயா? நீ செல்லலாம். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது சரியானதுதான். பெண்ணே இங்கு வா. உன் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறாயா? உன்னுடைய பழைய இருமல் ஆஸ்துமா வியாதி போய்விட்டது. இயேசு கிறிஸ்து உன்னை முழுமையாக சுகப்படுத்துவார் என்பதை விசுவாசி. நீ கிறிஸ்துவின் நாமத்தினாலே இதை பெற்றுக்கொள்ளுவாய். 49. அது சரியானதுதான். பெண்ணே இங்கு வா. உனக்கு பல குறைகள் இருக்கின்றன. அதில் ஒன்று நரம்பு தளர்ச்சி, மற்றொன்று இருதயக்கோளாறு இது உன்னை சங்கடப்படுத்தி உன் இருதயத்தில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இது உன்னை விட்டு போய்விட்டது என்பதை விசுவாசி. நீ உன் முழு இருதயத்துடன் விசுவாசித்து செல். நீ இவைகளை பெற்றுக் கொள்ளுவாய். சகோதரனே உன் முழு இருதயத்துடன் விசுவாசி தேவன் உன்னை சுகப்படுத்திவிட்டார். நீ முழு இருதயத்துடன் விசுவாசித்து தொடர்ந்து செல். பெண்ணே இங்கு வா. உன் முழு இருதயத்துடன் விசுவாசி. நீ இங்கு கவனி, நான் உன்னிடம் சிறிது நேரம் பேசவேண்டும். தேவன் உன்னைக் குறித்த சில விஷயங்களை வெளிப்படுத்துவார். நான் உன்னுடன் சிறிது நேரங்கள் பேசக்கூடுமானால் உன்னிடத்தில் என்ன குறை உண்டு என்பதை நான் கூறக்கூடும். 50. இது சரியானதுதான். உனக்கு கீல்வாதம் இருக்கிறது நீ படுக்கையை விட்டு எழும்ப்புவதற்கு முயலுகிறாய். சில நாட்களுக்கு முன்பு நீ உனக்கு பக்க வழியில் சென்றாய். ஆனால் உன் பாதங்கள் இடறியது. நான் சொல்லுவது சரிதானே. ஒரு விளக்கு கம்பத்தினருகில் யாரோ ஒருவர் உன்னை தள்ளிவிட்டார். நீ ஏறக்குறைய கீழே விழுந்து விட்டாய். இப்போதும் நீ உன் முழு இருதயத்துடன் செல். நீ உன் கால்களை நன்றாக மேலும் கீழும் உதறலாம். நீ சுகமடைந்துவிட்டாய். உன் முழு இருதயத்துடன் விசுவாசித்து செல். அது உன்னைவிட்டு போய்விட்டது. இயேசு கிறிஸ்துவை உன் முழு இருதயத்துடன் விசுவாசி. கர்த்தராகிய இயேசுவே இந்த பெண்ணை சுகப்படுத்தும். இவள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே சுகமடையட்டும். பெண்ணே உன் முழு இருதயத்துடன் விசுவாசி. என் ஜனங்களே நாம் அனைவரும் பக்கவாதம் ஏற்பட்ட கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். சர்வ வல்லமையுள்ள தேவன் தமது அளவற்ற வல்லமையினால்....... நீ அந்த சளி காய்ச்சலில் இருந்து சுகமடைய விரும்புகிறாயா? நீ செல்லலாம். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. விசுவாசமுள்ளவனாய் இரு. உன் முழு இதயத்துடன் விசுவாசி. 51. ஆசீர்வாதத்தின் கோப்பையில் பருகி தேவனுடைய பொன்னான ஆசீர்வாதத்தை கேட்டு பெற்றுக்கொண்டவர்களை குறித்து என்ன சொல்லலாம்? ஓ ஜுமலான் ரௌஹா. தேவனுடைய இரக்கம் மக்களுக்கு கிடைப்பதாக. தேவனிடம் விசுவாசமாய் இரு. அந்த மக்களைப் பற்றி என்ன கூறப்பட்டிருக்கிறதோ அவர்கள் என்ன செய்திருக்கிறார்களா. ஆனால் எப்படியிருந்தாலும் அவர்களும் சுகம் பெறுகிறார்கள். ஒரு நபர் இல்லை.....அவர்கள் வரும் போது அவர்களுடைய முகத்தின் வெளிப்பாடை கவனிக்கவும். சர்வ வல்லமையுள்ள தேவன் அன்று இரவு தேவதூதனை அந்த அறைக்குள் அனுப்பினார். இது அதிகப்பிரசிங்கித்தனம் என்று நீ கூறுகிறாய். அது சரி சகோதரனே முழு உலகமே இது சத்தியம் என்று அறியும். விஞ்ஞான உலகமும் இதை சத்தியம் என்று ஏற்றுக்கொள்ளுகிறது. நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பேசுகிறேன் அவர் இந்த வார்த்தைகளை சாத்தியமென்று உறுதிபடுத்துகிறார். அல்லேலூயா. நிச்சயமாகவே அது சரியானதுதான். அந்த மக்களை கடந்து செல்லும்போது எதிர்மறையாகவோ அல்லது நேர்மறையாகவோ இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள அவரை ஏற்றுக்கொள்ள நான் முயற்சி செய்கிறேன். பெண்ணே நீ எப்படி இருக்கிறாய்? உன் முழு இதயத்துடன் விசுவாசி. நீ சுகமடையும்படிக்கு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து மரித்தார் என்பதை விசுவாசி. அவர் இதை செய்தார் என்பதை நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாய். நீ விசுவாசிக்கிறாய். உனக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்படி நடந்தது உண்மைதானே? உனக்கு இருந்த கட்டி நீக்கப்பட்டிருக்கும்....... இயேசு கிறிஸ்து உன்னை முற்றிலுமாக சுகப்படுத்துவார். அது சரியானதுதான் நீ செல்லலாம், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ பூரணமாக சுகப்படுத்தப்பட முடியும். 52. அது சரியானதே! நீ விசுவாசிக்கிறாயா? உனக்கு நாள்பட்ட பெண்களுக்கான வியாதி. நீ மிகவும் பதட்டத்துடன் இருந்தாய். உனக்கு காதுகள் சரியாக கேட்கவில்லை. மேலும் உனக்கு காய்ச்சலும் இருக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவனே ஜீவனைக் கொடுப்பவரே எல்லா நல்ல வரங்களையும் தருபவரே இந்த பெண்ணை ஆசீர்வதியும். நான் இந்த வியாதியை, செவிட்டு ஆவியை சபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இவளை விட்டு போய்விடு. இது சரியானதுதான். உன் செவிகள் கேட்கின்றன. இப்போது உன் செவிகள் கேட்கின்றன. இப்போது உனக்கும் என்ன நேரிட்டது? உன்னுடைய பொருள் இதோ இங்கே இருக்கிறது. ஆனால் இது இப்போது உனக்கு தேவையில்லை. கவனித்து பார். இப்போது நான் சொல்லுவதைக் கேள். ஆமென் என்று கூறு. நான் இயேசுவை நேசிக்கிறேன் என்று கூறு, கிறிஸ்துவின் நாமம் போற்றப்படட்டும். நீ சுகமடைந்துவிட்டாய். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. கர்த்தருடைய நாமம் போற்றப்படுவதாக. (சபையார் அனைவரும் கர்த்தருடைய நாமம் போற்றப்படுவதாக என்று கூறுகிறார்கள்.) 'நிச்சயமாக, பெண்ணே, நீ குதிப்பதை நான் காண்கிறேன். உங்களிடம் எங்கோ தவறு உள்ளது. உங்களுக்கு மூட்டுவலி இருக்கிறது. அந்த விஷயத்தை கீழே எறியுங்கள். உங்கள் இதயத்தில் இயேசு கிறிஸ்துவை எடுத்துக்கொண்டு, "சாத்தானே, இங்கிருந்து போ, இங்கிருந்து போ" என்று சொல்லுங்கள். மேடையில் இருந்து சாதாரணமாகவும் நன்றாகவும் நடக்கவும். நீங்கள் அதை நம்புகிறீர்களா? ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் செயல்படுவீர்களா? உங்கள் கால்களை தரையில் வைத்து, மேடையில் நடக்கவும். அது சரி. இங்கிருந்து செல்லுங்கள், தேவனுக்கு நன்றி. கர்த்தரைத் துதியுங்கள். உங்கள் கைகளை காற்றில் பிடித்துக் கொண்டு, கர்த்தரைத் துதியுங்கள். நீங்களும் அதையே செய்ய விரும்புகிறீர்களா சகோதரனே? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அதை எடுத்துச் செய்யுங்கள். 53 "கர்த்தரைத் துதியுங்கள்" என்று கூறுவோம். [சபை கூறுகிறது, "கர்த்தரைத் துதியுங்கள்."] தேவன் மீது நம்பிக்கை வையுங்கள். எல்லாம் சரி. வாருங்கள், நம்புங்கள். நீங்கள் முழு மனதுடன் நம்புகிறீர்களா? இன்றிரவு அந்த கெட்டியான பெரிய ஹாம்பர்கரை நீங்கள் சாப்பிட விரும்ப மாட்டீர்களா? போ, அதைச் செய், மற்றும் வயிறு...இப்போது, அதை என்ன செய்தாய், நீங்கள் பதட்டமாக உள்ளீர்கள் (பார்த்தீர்களா?). அது ஒன்றும் தவறில்லை. உங்களுக்கு அல்சர் இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் அது தவறு. இது வயிற்றின் வயிற்றுப் போக்கைத் தவிர வேறில்லை. நீங்கள் புளிப்பு என்று தெரியும், மற்றும் அனைத்து தொந்தரவு மற்றும் சுற்றி எரியும். இப்போது, அது உங்களை விட்டுச் சென்றுவிட்டது. செல்லுங்கள், நீங்கள் விரும்புவதை சாப்பிடுங்கள். பெண்ணே, உங்களுக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது, அதுதான் இயேசு கிறிஸ்து. இப்போது உங்களுக்கு இருக்கும் அந்த நிலையில், புற்றுநோய், நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவரை அது உங்களைக் கொன்றுவிடும். அவர் உங்களைக் குணப்படுத்துவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? தேவன் உன்னை ஆசிர்வதிக்கட்டும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் போங்கள். நீங்கள் முழுமை அடையட்டும். ஆமென். 54. பெண்ணே வா. நீங்கள் முழு மனதுடன் நம்புகிறீர்களா? பதட்டம் உங்களை விட்டுப் போகிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா? தேவன் உன்னை ஆசிர்வதிக்கட்டும். அதற்காக தேவனை துதித்துக்கொண்டே செல்லுங்கள். ஆமென். "தேவனைத் துதியுங்கள்" என்று சொல்லலாம். [சபையானது, "கர்த்தரைத் துதியுங்கள்" என்று கூறுகிறது] ஓ நம்முடைய இரட்சகர் எவ்வளவு அதிசயமானவராக இருக்கிறார்? பக்திவிநாயத்துடன் இருங்கள். அவரை போற்றி துதியுங்கள். சிறிது நேரம் இருங்கள். செவிட்டு ஆவி...... எல்லா இடங்களிலும் உள்ளவர்கள் உங்கள் தலைகளை தாழ்த்துங்கள். சர்வவல்லமையுள்ள தேவனே! ஜீவனைக் கொடுப்பவரே உம்முடைய ஆசீர்வாதத்தை அனுப்பி இவளை சுகப்படுத்தும். சாத்தானே நீ இவளைவிட்டு போய்விடு. நான் சொல்லுவதை கவனி. உனக்கு செவிகள் கேட்கிறது. நாம் அனைவரும் இப்படியே சொல்லுவோம். பெண்ணே, இதயக் கோளாறு உங்களை அங்கேயே விட்டுச் சென்றதாக நம்புகிறீர்களா? அது சரி. வலதுபுறமாகச் சென்று, "ஆண்டவரைத் துதியுங்கள்" என்று மகிழ்ச்சியுடன் சொல்லுங்கள். 55 பெண்ணே வா. என். நீங்கள் முழு மனதுடன் நம்புகிறீர்களா? அந்த கீல்வாதத்தை போக்க வேண்டுமா? நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்கிறீர்களா? தேவன் உன்னை ஆசிர்வதிக்கட்டும். சரியாகச் சென்று பெறுங்கள்...?... கர்த்தராகிய இயேசுவின் நாமம். பெண்ணே இங்கு வா. உன் முழு இருதயத்துடன் விசுவாசி. சகோதரியே உனக்கு சுகம் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறாயா? உன் கைகளை உயர்த்தி "நான் இயேசு கிறிஸ்துவை என் சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்ளுகிறேன். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக நீ செல்லலாம். உனக்கு அந்த அறுவை சிகிச்சை அவசியமில்லாமல் போய்விட்டது. நீ சுகமடைவாய். நம்முடைய முழு இருதயத்துடன் விசுவாசிப்போமாக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக பெண்ணே நீ விசுவாசிக்கிறாய்.........? நீ உடனே ஏற்றுக்கொள். ஏற்றுக்கொள்ளவில்லையா? உன்னுடைய சிறுநீரக கற்கள் நீங்கிவிட்டது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 56. பெண்ணே இங்கு வா. ஒரு தொடர்ச்சியான நரம்பு தளர்ச்சி உன் வாழ்நாள் எல்லாம் உன்னுடனே வந்து கொண்டிருக்கிறது. ஆனால் உனக்கு கீழ் வாதமும் இருந்து உன்னை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறது. நான் சொல்லுவது சரிதானே? நீ செல்லலாம் உனக்கு கிடைத்த சுகத்தை ஏற்றுக்கொண்டு இயேசுவே எனக்கு பூரண சுகத்தை தாரும். ஆமென் அல்லேலூயா. சர்வ வல்லமையுள்ள தேவனே, ஜீவனை அளிப்பவரே உம்முடைய சமாதானத்தை இந்த மனிதர் மீது அனுப்பும். இவரிடம் உள்ள செவிட்டு ஆவியை விரட்டிவிட்டு இவரது செவிகளை கேட்க செய்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவருக்கு நலம்பெற செய்யும். சாத்தானே இவரைவிட்டு வெளியே வா. நான் பேசுவது உங்களுக்கு கேட்கிறதா? அது சரியானதுதான். நீங்கள் செல்லலாம். சந்தோஷத்துடன் சாலையில் செல்லுங்கள். அதே சம்பவம்தான்: ஓ பிசாசே இந்த பெண்ணைவிட்டு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வெளியே வா. இவளை வீட்டுவிடு. நான் சொல்வதைக்கேள். ஆமென் என்று சொல்லவும். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சுகமடைவாயாக. நீ செல்லலாம். 57. ஐயா இங்கு வாருங்கள். நீங்கள் உங்கள் இரவு உணவை உண்ண செல்ல வேண்டும் அல்லவா? இயேசுவின் நாமத்தினாலே நீங்கள் தொடர்ந்து செல்லலாம். உங்களுடைய வயிற்று பிரச்சினை உங்களைவிட்டு நீங்கிவிடும். உங்கள் முழு இருதயத்துடன் இங்கு வரவும். உங்களுடைய நரம்பு வியாதியிலிருந்து சுகமடைவீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்கு கிடைத்த சுகத்தை ஏற்றுக்கொண்டு செல்லவும். சகோதரனே நீ சுகம்பெற விரும்புகிறாயா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உன் சுகத்தை பெற்றுக்கொள். ஆமென். நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்று என்ன வேண்டாம். தேவனே இந்த சகோதரனை இயேசுவின் நாமத்தில் சுகப்படுத்தும். சற்று நேரம் இருங்கள். தேவனுடைய தூதன் இப்போது நம்மை கடந்து செல்லுகிறார். பார்வையாளர்கள் ஆமென் என்பார்களாக. நீங்கள் அந்த நரம்பு தளர்ச்சியிலிருந்து விடுபட விரும்புகிறாயா பெண்ணே? உன் சுகமடைதலை ஏற்றுக்கொண்டு இயேசுவே! எனக்கு சுகமளித்ததற்கு நன்றி என்று கூறு. நான் அவரில் அன்பு கூறுகிறேன் ஏனெனில் அவர் முதலாவது என்னில் அன்புகூர்ந்து என் இரட்சிப்பை கல்வாரியில் கிரயத்திற்கு வாங்கினார். 58. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இயேசு உனக்கு சுகமளிப்பார் என்று நீ விசுவாசிக்கிறாயா? ஆமாம் அவர் சுகமளித்தார். உனக்கு ஒருவிதமான காய்ச்சல் நீண்ட நாட்களாக இருந்து உன்னை சங்கடப்படுத்துகிறது. இது உனக்கு முதலாம் உலக யுத்தம் துவங்கும் முன்பே வந்துவிட்டது. நான் போர்வீரர்கள் தங்கள் தொப்பிகளில் இறுக்கமான கால்ச்சட்டை துணியால் சுற்றி கை விரல்களால் பிடித்துக்கொண்டு அணிவகுத்து செல்லுகிறதை காண்கிறேன். நீயும் அதில் இருக்கிறாய். இருண்ட மக்கள் உள்ள ஒரு தேசத்தில் உனக்கு இந்த காய்ச்சல் தொற்றியுள்ளது. அந்த தேசம் மெக்ஸிகோ என்று நான் நம்புகிறேன். ஒருவிதமான வீக்கம் உனக்குள் ஏற்படுகிறது. உன்னுடைய நடு முதுகெலும்பில் இரண்டு அல்லது மூன்று காயங்களும் ஏற்பட்டுள்ளது. நீ பிரெட் போஸ்ஒர்த் என்பவருக்கு நண்பராக இருந்தாய். அவன் என் முன்னா்ல நின்றுகொண்டிருப்பதைக் காண்கிறேன். அவனுடன் ஒரு தடித்த பெரிய உருவமுள்ள தன் தலை முடியை வாரியுள்ள ஒருவனைக் காண்கிறேன். அவன் பால் ரேடார். நான் சொல்லுவது சரிதானே? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னுடன் இருந்து உனக்கு சுகம் தருவராக. 59. இங்கு வரவும் நீ உன் முழு இதயத்துடன் விசுவாசி. உனக்கு நல்ல கண்கள் இருக்கிறது. ஆனால் நீ அதை உபயோகிக்க முடியவில்லை. இது ஒரு தள பார்வை என்பதாகும். இது உன்னை சங்கடப்படுத்துகிறது. இதனால் நீ மிகவும் பதட்டமடைந்து சோர்வுற்றுவிட்டாய். இது வாழ்க்கையின் ஒரு நேரம். ஆனால் நீ இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவர் உன் நோய்களையெல்லாம் குணமாக்கி உன் பழைய சரீரத்தைக் கொடுப்பார் என்று நம்புகிறாயா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சிறு பெண்ணே ஒரு கட்டிக்காக நீ ஒரு அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாக இருக்கிறாய். ஆனால் தேவன் உனக்கு சுகமளிக்கக்கூடும். நீ இதை விசுவாசிக்கிறாயா? அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இதை ஏற்றுக்கொண்டு செல்லலாம். ஐயா எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் சிறுநீரக கோளாறிலிருந்து விடுபட விரும்புகிறாய். தேவன் உனக்கு சுகம் கொடுப்பார் என்று நீ விசுவாசிக்கிறாயா? உனக்கு குடல் இரக்கம் வியாதி உள்ளது. நீ தாங்கமுடியாத மனசோர்வில் இருக்கிறாய். இது உனக்கு சுரப்பி கோளாறையும் கொண்டு வந்துவிட்டது இது சரிதானே? வேறொரு நாளில் நீ இதற்காக ஜெபித்தாய். இந்த சாலையின் கடைசியில் இதை செய்தாய். ஒரு மரத்தின் அருகில் இதை நீ நிறுத்தாமல் செய்து கொண்டிருந்தாய். நீ இப்போது செல்லலாம். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நீ சுகம் பெற்றாய். 60. பெண்ணே இங்கு வா. நீ உன் முழு இதயத்துடன் விசுவாசி. உனக்கு பெண்களுக்குரிய வியாதி இருக்கிறது. இது உன்னை பல ஆண்டுகளாக சங்கடப்படுத்திக்கொண்டு இருக்கிறது. இது உன் கருப்பையை பாதித்துள்ளது. அது சரிதானே? நீ இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சுகமடைந்து போகலாம். நாம் கர்த்தருடைய நாமத்தை போற்றுவோம். பெண்ணே இங்கு வரவும். நீ உன் நரம்பு தளர்ச்சி வியாதியிலிருந்து விடுபட விரும்புகிறாயா? அது சரியானதுதான். நீ கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே சுகம் பெறுவாயாக. உன் முழு இதயத்துடன் விசுவாசி. நீ உன்னுடைய ஆஸ்துமா நோயிலிருந்து விடுபட விரும்புகிறாய். இது கீல் வாத நோய் ஆகும். நீ ஏன் நின்றுகொண்டிருந்தாய் என்பது எனக்கு விளங்கவில்லை. நீ உன்னுடைய இடத்தில எழுந்து நிற்க முயற்சித்துக் கொண்டு இருந்ததை நான் கண்டேன். நீ செல்லலாம். உனக்கு இந்த வியாதி இனிமேல் ஏற்படாது. சந்தோஷத்துடன் செல்லவும். 61. இங்கு வா பெண்ணே நீ உன் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறாயா? நான் ஒரு வார்த்தை சொல்லுவேன் என்றால் நீ இன்னமும் விசுவாசிப்பாய், அப்படித்தானே? உனக்கும் எனக்கும் நடுவே ஒரு மேஜை இருக்கிறது. அதன் மீது உணவு இருக்கிறது. நீ அதிலிருந்து நடந்து போய்விட்டாய். நீ சென்று உன் உணவை உண்டு சுகம் அடைவாயாக. நீ உன் வயிறு கோளாறிலிருந்து சுகமடைய செய்வார். பெண்ணே! உனக்கு ஒரு பயங்கரமான உபாதையை அடைந்துள்ளாய். அப்படித்தானே? அது உனக்கு பின்புறம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இயேசு கிறிஸ்து உன்னை சுகப்படுத்துவார். நீ அதை விசுவாசி. இதை நீ ஏற்றுக்கொள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ சென்று சுகம் பெற்றுக்கொள். நாம் கர்த்தருடைய நாமம் போற்றப்படுவதாக என்று கூறுவோம். (சபையாரும் கர்த்தருடைய நாமம் போற்றப்படுவதாக என்று கூறுகிறார்கள்.) நீ உன்னுடைய கீல்வாத வியாதியிலிருந்து சுகமடைய விரும்புகிறாயா? ஆம் விரும்புகிறாய் என்றறிவேன். இப்போது நீ இதிலிருந்து விடுபட்டாய் என்பதை விசுவாசி. நீ விசுவாசித்தபடியே உனக்கு சுகம் கிடைத்துவிட்டது. 62. பெண்ணே இங்கு வா. ஆமென், உனக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் உன்னுடைய கட்டி குணமடைய வேண்டும் என்று விரும்புகிறாய். நீ அந்த பிசாசை உன்னிடமிருந்து விரட்ட தேவனால் கூடும் என்பதை விசுவாசி. அந்த உயிரணுக்கள் உடைந்து போய்விடும். இதை நீ விசுவாசிக்கிறாயா? அப்படியானால் அவரை உனக்கு சுகமளிப்பவராக இப்போதே ஏற்றுக்கொள். 63. பெண்ணே இங்கே வா. அல்லேலூயா! பரிசுத்த ஆவியானவர் இப்போது எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிறார். இந்த கட்டிடத்தில் எப்போதும் பிசாசின் வல்லமை எப்போதும் சர்வவல்லவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. ஆமென்! இப்போது எது வேண்டுமானாலும் நடக்கக்கூடும். யாராக இருப்பினும் விசுவாசிக்கிற ஒருவருக்கு பெற்றுக்கொள்ளக்கூடும். நாம் இன்னொருவரை ஜெப வரிசையில் கொண்டுவர அவசியம் இல்லை. அவரவருடைய விசுவாசத்தின்படி ஒவ்வொருவரும் சுகம் பெற்றுக்கொள்ளுவார்கள். பெண்ணே நீ சென்று உனக்கு என்ன வேண்டுமோ அதை சாப்பிடலாம். உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது. பெண்ணே இங்கு வா. நீ உன் முழு இதயத்துடன் விசுவாசிக்கிறாயா? இப்போது நீ இங்கே இருக்கிறாய். இது மனதை படிக்கும் முறை அல்ல. உன் கைகளை என் தோளின் மீது வை. இப்போது இதை உன்னைவிட்டு போய்விட்டது. நீ இந்த மேடையைவிட்டு செல்லலாம். சந்தோஷத்துடன் நன்றி சொல்லு. 64. நீ எப்படி இருக்கிறாய் பெண்ணே? தேவன் உனக்கு பூரண சுகத்தைக் கட்டளையிடுவார். உனக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். இது உன்னை ஆட்டி படைத்துக்கொண்டு இருக்கிறது. உனக்கு இது பதட்டத்தை ஏற்படுத்துகிறது. அப்படித்தானே? நீ சுகம் பெற்றுவிட்டாய். நீ செல்லலாம். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இங்கே வா பெண்ணே! நீ என் தோளின்மீது கைகளை வைத்து இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதை என் முழு இதயத்துடன் விசுவாசிக்கிறேன் என்று கூறு. இதை உன் முழு இதயத்துடன் கூறு. ஆம். இந்த மேடையைவிட்டு நீ செல்லலாம். இந்த நிலையிலிருந்து என்னை சுகப்படுத்தியதற்கு நன்றி இயேசுவே என்று கூறி செல்லவும். ஐயா இங்கே வரவும். நீ உன் முழு இதயத்துடன் விசுவாசிக்கிறாயா? தேவன் உனக்கு சுகமளிக்க இங்கு இருக்கிறார் என்பதை நீ விசுவாசிக்கிறாயா? நரம்பு தளர்ச்சி என்பது உங்களைப்போல வயதுள்ளவர்களுக்கு மிகவும் சிரமமானது. ஆனாலும் நீ இதிலிருந்து விடுபட முடியும். இதை நீ விசுவாசிக்கிறாயா? இது உனக்கு சிறுநீர்ப்பை கோளாறினால் ஏற்பட்டது. நீ இந்த மேடையிலிருந்து செல்லலாம். கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி என்று கூறி சென்றார். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 65. இங்கே வரவும். உன் முழு இதயத்துடன் விசுவாசிக்கிறாய். இங்குள்ள பார்வையாளர்களில் எத்தனைபேர் இந்த மேடையில் நடந்த அதே காரணத்தால் சுகமடைந்துள்ளார்கள்? அதுவும் சரிதான் உன்னுடைய இருதய கோளாறு நீங்கிவிட்டது, பெண்ணே நீ செல்லலாம். நாம் தேவனுக்கு நன்றி என்று சொல்லுவோமாக. (சபையாரும் தேவனுக்கு நன்றி என்று கூறுகிறார்கள்.) ஓ நான் எப்படி கிறிஸ்துவை நேசிக்கிறேன்! அவர் முதலில் என்னை நேசித்தார். அவர் என்னுடைய அவர் என்னுடைய இரட்சிப்பை குளிரான இருள் நிறைந்த கல்வாரியில் கிரயத்திற்கு வாங்கினார். நீ உன்னுடைய சுகமடைதலை ஏற்றுக்கொள். நீ சென்று எனக்கு சுகம் அளித்ததற்கு நன்றி இயேசுவே என்று கூறு. இங்கே வா பெண்ணே! உன்னுடைய முதுகெலும்பு உபாதையிலிருந்து விடுபட வேண்டும், சிறுநீரக கோளாறும் உள்ளது. நீ சென்று கர்த்தராகிய இயேசுவே எனக்கு சுகமளித்ததற்கு நன்றி என்று கூறு. உன் முழு இதயத்துடன் விசுவாசி. பெண்ணே இங்கு வா! நரம்பு தளர்ச்சி, படபடப்பு, இதுதான் உன் இருதயத்தின் நிலை. நீ இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எனக்கு சுகமளித்ததை ஏற்றுக்கொண்டு செல்லவும். பெண்ணே இங்கு வா! உன்னுடைய இருதய கோளாறு அத்துடன் சளி காய்ச்சல் உனக்கு அதிக சங்கடத்தை ஏற்படுத்துகிறது. நான் சொல்லுவது சரிதானே? நீ இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பெற்றுக்கொண்ட சுகத்திற்கு நன்றி கூறிவிட்டு செல்லவும். 67. பெண்ணே இங்கு வா! உன் முழு இதயத்துடன் விசுவாசி. உனக்கு இருக்கும் பழைய பெண்களுக்கான வியாதி இந்த வருடம் முழுவதும் உன் பிள்ளைகள் பிறந்தது முதல் உன்னை சங்கடப்படுத்திக்கொண்டு இருக்கிறது. நீ கர்த்தராகிய இயேசுவே எனக்கு சுகமளித்ததற்கு நன்றி கூறிவிட்டு செல்...... பெண்ணே நீ விசுவாசிக்கிறாயா? தேவன் இந்த ஏழையான சிறுபெண்ணை இயேசுவின் நாமத்தினாலே சுகமளிக்கிறார். ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக நீ செல்லலாம். நாம் தேவனுக்கு நன்றி கூறுவோம். இப்போது மிகவும் பக்தி விநயத்துடன் இருங்கள். தொடர்ந்து கவனித்துக்கொண்டு இருங்கள் தேவனுடைய ஆவியானவர் கடந்து செல்லுகிறார். இங்கு யாரோ ஒருவர் சுகம் பெற்றுக்கொண்டு இருக்கும் போது நீயும் அதை பெற்றுக்கொள். நீ இதை விசுவாசத்தினாலே ஏற்றுக்கொள். உன் முழு இதயத்துடன் விசுவாசி. தேவன் இதை அப்படியே செய்வார். ஆமென். 68. அது சரியானதுதான். ஐயா இங்கு வரவும். உன் முழு இதயத்துடன் விசுவாசிக்கிறாயா? நீங்கள் எல்லோரும் இங்கு கட்டிலில் தூக்கு படுக்கையில் இருக்கும் மனிதனுடன் சேர்ந்து விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் எல்லோரும் விசுவாசிக்கிறீர்கள். விசுவாசமுள்ளவர்களாய்.........பின் பகுதியில் உள்ளவர்கள் விசுவாசியுங்கள் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டு இருங்கள். ஐயா நீங்கள் உங்கள் தலையை உயர்த்தி அங்கே ஒரு வெள்ளை நிற கோட் அணிந்து இருந்தீர்கள். ஓ இது அந்த சிறு பெண்ணை பற்றி.......அது நீங்கள்தானே? ஆம் ஐயா அந்த உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் அந்தப்பெண் பற்றி தான் அது. அவள் ஒரு குழந்தை பெற வேண்டுமென்று விரும்புகிறாள். அவள் நகருகிறதை நான் காண்கிறேன். அது சரிதானே இளம்பெண்ணே? நீ இதை பெற வேண்டுமென்று விரும்புகிறாயா? நீ விசுவாசிக்கிறாயா? உன் கைகளை உயர்த்து. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன் கால்களால் எழுந்து நில். கர்த்தராகிய இயேசுவே இவள் கருத்தரித்து இவள் வாஞ்சிக்கும் குழந்தையை பெற்றுக்கொள்ளுவாளாக. நான் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென். என் சகோதரியே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவ சமாதானம் உன்னுடன் இருப்பதாக. அல்லேலூயா. தேவனிடம் விசுவாசமாய் இரு. 69. நீ ஒரு உண்மையான விசுவாசி. உன் முழு இதயத்துடன் -முழு இதயத்துடன் விசுவாசி. உன்னுடைய மார்பில் சில குறைகள் இருக்கிறது. உன்னுடைய கண்களில் கண்புரை இருக்கிறது. சைனஸ் பாதிப்பு உள்ளது. நான் சொல்லுவது சரிதானே? நீ ஒரு பார்வையாளராக இங்கு வந்திருக்கிறாய் அல்லவா? நீ கனடா நாட்டிலிருந்து வந்துள்ளாய். உன்னுடைய மனைவியும் வியாதி உள்ளவளாய் இருக்கிறாள். அவளுக்காக இந்த மனிதன் இங்கிருந்தே ஜெபித்தபோது அவளும் சுகம் பெற்றாள். அது போல தான் நீயும். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஆகையால் நீங்களும் பாருங்கள், நானும் அங்கு நின்றுகொண்டிருந்தேன் டாமி. தேவனிடத்தில் விசுவாசமாய் இரு. இங்கே வா. நீ விசுவாசிக்கிறாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் சுகம் பெற்றுகொள்வாய். நீ சென்று உரத்த சத்தத்துடன் தேவனை போற்று. விசுவாசமாயிரு. ஆமென். கர்த்தராகிய கிறிஸ்துவே இவளை ஆசீர்வதியும். இவளுக்கு சுகத்தை இயேசுவின் நாமத்தில் தாரும். ஆமென். உன்னால் நான் சொல்கிறது கேட்கமுடிகிறதா? அது சரியாக இருக்கிறது. நீ சுகம் பெற்றுவிட்டாய். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ செல்லலாம் தேவன் உன்னுடன் இருப்பராக. 70. சகோதரியே நீ எப்படி இருக்கிறாய்? வாருங்கள். நீ முழு இதயத்துடன் விசுவாசிக்கிறாயா? கீழ் வாதத்தால் விறைப்பாக இருக்கிறது. நரம்பு தளர்ச்சியினாலும் மனம் சோர்வடைந்து இருக்கிறாய். இயேசுவே எனக்கு சுகமளித்ததற்காக நன்றி என்று கூறு. இப்போது நீ இந்த மேடையைவிட்டு செல்லலாம். சந்தோஷத்துடன் "தேவனுக்கு மகிமை என்று கூறி" முழுமையாக பூரணபடு. நீ உன் முழு இதயத்துடன் விசுவாசிக்கிறாயா? உனக்கு இருக்கும் சளி காய்ச்சலிலிருந்து சுகம்பெற எண்ணுகிறாய். நீ சென்று கொண்டே தேவனை போற்றி துதித்து இயேசுவே உமக்கு நன்றி என்று சொல்லு. எல்லாம் சரி உன் முழு இருதயத்துடன் விசுவாசி. நீ விசுவாசிக்கிறாயா? இயேசுவின் நாமத்தில் இவர் சுகமடையட்டும். உன் கைகளை உயர்த்தி நன்றி இயேசுவே என்று கூறு. அது தான் நீ , கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஐயா இங்கு வாருங்கள். உன்னுடைய இருதய கோளாரிலிருந்து சுகம் பெற்றுக்கொள்ளுங்கள். உன் கைகளை உயர்த்தி இயேசுவே எனக்கு சுகமளித்ததற்கு உமக்கு நன்றி என்று கூறு. ஆமென். 71. ஐயா இங்கு வரவும். நீ முழு இதயத்துடன் விசுவாசிக்கிறாயா? உன்னுடைய பழைய நரம்பு வியாதி உன்னைவிட்டு போய்விட்டது என்று நீ நம்புகிறாயா? இயேசுவின் நாமத்தில் உன் சுகத்தை பெற்றுக்கொள்ளவும். தேவனுடைய நாமத்திற்கே மகிமை என்று கூறுவோமாக. இது உன்னுடைய பிள்ளைதானே? இந்த பிள்ளைக்கு உள்ள பிரச்சினை என்னவென்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவார் என்பதை நீ விசுவாசிக்கிறாயா? உன் முழு இருதயத்தோடு் தேவனுடைய உதவியால் இந்த பிள்ளையின் பிரச்சினை என்னவென்று பரிசுத்த ஆவியானவர் உனக்கு வெளிப்படுத்துவார் என்றால் அப்போது தேவன் அவரது சபையில் இருந்துகொண்டு இதையே செய்கிறார் என்பதை நீ விசுவாசிப்பாயா? அவன் ஒரு நரம்பு தளர்ச்சியுள்ள பிள்ளை. நான் சொல்லுவது சரிதானே? கரங்களை அவன் தலையின் மீது வைத்து சொல்லுங்கள், "கர்த்தாவே அவனுடைய சுகத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன், மற்றும்....?..... இந்த சிறுவனுடைய தகப்பனுக்காகவும், தகப்பனே. சாத்தானே இவனைவிட்டு வெளியே போய்விடு. சாத்தான் இவனுக்கு வெளியே போய்விட்டான் மகனே. நீ இந்த மேடையைவிட்டு போ. நீ சுகமடைவாய். தேவனுடைய நாமம் போற்றப்படுவதாக என்று நாம் கூறுவோம். (சபையாரும் தேவனுடைய நாமம் போற்றப்படுவதாக என்று கூறுவார்களாக.) 72. அடுத்து அந்த பெண்ணை இங்கு கொண்டு வாருங்கள். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இயேசு கிறிஸ்து உன்னை இப்போதே சுகம் தருகிறார் என்று விசுவாசி. நீ சென்று தேவனே உமக்கு நன்றி என்று சொல்லுவாயாக. உம்முடைய நாமம் போற்றப்படட்டும். ஒரு எதிர்மறையான சாட்சியை சொல்லவேண்டாம். நேர்மறையான சாட்சியை கூறு. இயேசு எனக்கு சுகம் கொடுத்துவிட்டார். நான் சுகமாக இருக்கிறேன். நீ உன் சுகத்தை பெற்றுக்கொள்ளுவாய் நீ செல்லலாம். தேவனுடைய நாமம் போற்றப்படுவதாக என்று கூறவும். இங்கு வா வாலிபனே! இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்? நீ இதை முழு இருதயத்தோடு நம்புகிறாயா? உன்னுடைய நரம்பு தளர்ச்சி அது உன்னை விட்டு போய் விட்டது என்று நம்புகிறயா? இயேசு கிறிஸ்து அதை உன்னிடம் இருந்து எடுத்து போடுகிறார் என்று விசுவாசிக்கிறாயா? அவர் அதை செய்து விட்டார் அப்படி என்றால் ஆமென். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக சென்ற......?...... 73. பெண்ணே உன் கண்ணிலுள்ள கண்புரை உன்னைவிட்டு நீங்க வேண்டுமென்று விரும்புகிறாயா? அது நடக்கக்கூடும். இயேசு உனக்கு சுகம் அளிப்பவர் என்பதை விசுவாசி. இப்போது அந்த கண்புரை உனக்கு சரியாகிவிட்டது. அந்த கண் உனக்கு சரியாகிவிட்டது. நீ சென்று தேவனை போற்றி துதி. நீ என்ன விசுவாசித்தாயோ அது உனக்கு கிடைக்கும். பெண்ணே இங்கு வா. உனக்குள்ள அனைத்து நரம்பு தளர்ச்சி அதனால் மன சோர்வு. இயேசுவின் நாமத்தில் உனக்கு சுகம் கிடைக்கட்டும். தேவனை போற்றி அவருக்கு நன்றி கூறி செல்லவும். சகோதரனே நீ அங்கு இருக்கும்போதே உன் சுகத்தை பெற்றுக்கொண்டாய் நீ செல்லலாம். சகோதரியே இங்கு வா. உன் முழு இதயத்துடன் விசுவாசிக்கிறாயா? அது எப்படி ஆகும்? அது இயேசுவின் நாமத்தில் உனக்கு கிடைக்கும். கர்த்தர் அதை உனக்கு அருள்வார். உனக்கு என்ன தேவையோ அதை நீ சென்று சாப்பிடு. உன்னுடைய வயிற்று கோளாறு உன்னைவிட்டு விலகிவிட்டது. ஆமென். 74. சிறு பெண்ணே நீ என்ன நினைக்கிறாய்? உன் முழு இதயத்துடன் விசுவாசி. உன்னுடைய வாழ்வில் முன்பு உன்னை தாக்காத ஒன்று உன்னை இப்போது தடைசெய்கிறது. நீ ஏதோ ஒரு காரியத்தின் பிரசன்னதில்........இருப்பதை உணருகிறாய். நான் சொல்லுவது சரிதானே? அது சரியானதுதான். நீ எப்போதும் நரம்புதளர்ச்சியால் பாதிக்கப்பட்டு மனசோர்வடைந்து இருக்கும் பிள்ளை. இது உன்னுடைய பள்ளி வாழ்க்கையிலிருந்து இருக்கிறது. நான் சொல்லுவது சரிதானே? இப்போது அது உன்னைவிட்டு போய்விட்டது என்பதை விசுவாசிக்கிறாயா? அது உன்னைவிட்டு போய்விட்டது. நீ சென்று தேவனுக்கு நன்றி என்று சொல்லி அவரை போற்றி துதி. ஐயா உன் கண்கள் சுகமடையும் என்று நம்புகிறீர்களா? இயேசுவின் நாமத்தில் அதை அருளும் தேவனே. நீ சென்று தேவனை போற்றி துதி. ஐயா உங்களுக்கு சுகம் கிடைக்கும் என்பதை விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இவருக்கு சுகம் கிடைக்கட்டும். நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். நீங்கள் போய் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கர்த்தருடைய நாமத்தை போற்றுங்கள். 75. இங்கு வா பெண்ணே! உன் முழு இதயத்துடன் விசுவாசிக்கிறாயா? நீ வீட்டிற்கு சென்று அங்கு உன் வியாதியான பிள்ளையின்மீது கைகளை வைக்கவும். உன்னுடைய ஆஸ்துமா உன்னை விட்டு இப்போதே போய்விடும். தேவனை போற்று. அவருக்கு நன்றி கூறி போற்று. நீ இதை பெற்றுக்கொள்ளுவாய். ஓ கிறிஸ்துவின் அன்பில் எங்கள் இருதயங்களை கட்டப்பட்டிருக்கும் அந்தப் கட்டை ஆசீர்வதித்தருளும். மேலே உள்ளது போன்று தான் ஐக்கியத்தின் உறவுள்ள மனது இருக்கும். சகோதரியே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ உன் முழு இதயத்துடன் விசுவாசித்ததாயானால் நீ பார்வையில்லாமல் போவதில்லை. நீ இதை விசுவாசிக்கிறாயா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ சென்று இதை பெற்றுக்கொள். இங்கு வா பெண்ணே! ஆமென். ஓ! இது என்ன ஒரு இரவு. என்ன ஒரு நேரம் என்று கிறிஸ்துவுக்குள்ளாக பரலோக..... இடத்தில் ஒன்று கூடுவது எவ்வளவு பெரிய தனியுரிமை? பெண்ணே நீ இங்கு வா! உன்னுடைய பின் முதுகு உபாதையிலிருந்து விடுபட வேண்டும் அப்படித்தானே? நீ போய் இயேசு கிறிஸ்துவை உன் சுகமளிப்பவராக ஏற்றுக்கொண்டு, கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி என்று சொல்லவும். உனக்கு அது கிடைக்கும். 76. பெண்ணே இங்கு வா! உன் முழு இதயத்துடன் விசுவாசிக்கிறாயா? நான் உனக்குள்ள குறை என்னவென்று சொல்லாமல் இருந்திருந்திருந்தாலும் நீ சுகமடைந்துவிட்டாய் என்று விசுவாசிக்கிறாய். அப்படித்தானே? நீ போய் என்ன சாப்பிட வேண்டுமென்று விரும்புகிறாயோ அதை சாப்பிடு. உன் வயிற்று கோளாறு நீங்கிவிட்டது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கே மகிமையென்று நாம் அனைவரும் கூறுவோமாக. தேவன் இதை சரிசெய்வார் என்பதை நீ விசுவாசிக்கிறாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த குழந்தையின் சுகத்திற்காகவும் இதன் தாயின் சுகத்திற்காகவும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ சந்தோஷத்துடன் உன் பாதையில் செல். அவருக்கு நன்றி சொல்லு. நீ உன் முழு இதயத்துடன் விசுவாசி, தேவன் உனக்கு பூரண சுகம் அளிப்பார் என்று விசுவாசி. 77. அங்கே நிற்பவர்களில் யாராகிலும் ஒருவர் அங்கே சுழலும் நெருப்பை நெருப்பு தூண் தொங்கிக்கொண்டு இருப்பதைக் காண முடிகிறதா? அது அந்த பெண்ணை சிதற செய்கிறது. அவள் ஒரு கருமை நிறமுள்ள பெண், அவளுக்கு மார்பில் இருந்த கட்டிக்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். அவளுக்கு முன்பாக இரு மேஜை நகருகிறது. அவளுக்கு வயிற்றிலும் வியாதி உள்ளது. அங்கே இருக்கும் ஒரு பெண் தனது தொப்பியில் இறகு போன்ற ஒன்றை அல்லது அதுபோன்ற எதோ ஒன்றை அணிந்தவாரு உட்கார்ந்துள்ளார். அது நீதான் பெண்ணே! உன் கண்களை ஏறிட்டு பார்க்கும் நீதான். உன் கால்களைகொண்டு எழுந்து நில். உனக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அப்படித்தானே? அது சரிதான். நீ சுகமடைந்துவிட்டாய் நீ வீட்டிற்கு போகலாம். தேவன் உனக்கு சுகமளித்துவிட்டார். ஆமென். ஒவ்வொருவரும் விசுவாசிக்க வேண்டியிருக்கிறது. நல்ல கிறிஸ்தவ நண்பர்களை கவனியுங்கள். என்னால் சுகமளிக்க முடியாது, நான் சுகமளிப்பவன் இல்லை. இயேசுகிறிஸ்துவே சுகப்படுத்தினார். அவர் ஏற்கனவே சுகப்படுத்திவிட்டார். 78. அங்கே இருக்கும் ஐயா அங்கு பின்னல் இரண்டாவது வரிசையில் இருந்து என்னை உற்று பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் மனதில் வேறொருவர் இருக்கிறார். அவர் ஒரு நீல நிற சட்டை அணிந்துள்ளார். அவருடைய சட்டை கழுத்துப்பட்டை திறந்து இருக்கிறது. நீ வேறொருவருக்காக கவனித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இது ஒரு சகோதரர் பற்றியது. சகோதரர்...... எழுந்து நிற்கவும். உனக்கு முன்பு மற்றொரு மனிதர் நிற்கிறார். அவரைக் குறித்த தரிசனம் என்னவென்றால் அவர் கண்பார்வையில்லாதவர் உனக்கு தாய் இருக்கிறார்கள். அவளும் இருதய வியாதி உள்ளவர். அப்படித் தானே? அவர்கள் உனக்கு அருகாமையில் இருக்கிறார்கள். தரிசனத்தில் உன்னை உன் வீட்டில் நான் பார்த்தபோது நீ அங்கிருந்து கிளம்பும் முன்பாக உன் மனைவி உன் அருகில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறாள். அப்படித்தானே? அந்தளவு விசுவாசத்துடன் உன் இடத்தில் நான் இருப்பேனானால் என்ன செய்வேன் தெரியுமா? நான் அந்த சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி அவர்களுக்கான சுகமளித்தலை பெற்றிருப்பேன். அதை நீ செய்வாயா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக 79. நாம் தேவனுக்கு மகிமை என்று கூறுவோமாக. (சபையார்...... அனைவரும் தேவனுக்கு மகிமையென்று சொல்லுகிறார்கள்.) சகோதரர் டாமி நீங்கள் எழுந்து நிற்க விரும்புகிறேன். நீ அவரை விசுவாசிக்கிறாயா? உனக்குள்ள சளி காய்ச்சலில் இருந்து சுகம்பெற நீ விரும்புகிறாயா? உன் சுகத்தை நீ பெற்றுக்கொண்டு போகலாம். இயேசுவின் நாமத்தினாலே சுகம் பெற்றுக்கொள்ளுவாயாக. வாருங்கள் ஐயா உங்கள் முழு இருதயத்துடன் அவரை நம்புகிறீர்களா? நீங்கள் அப்படி தான் செய்கிறீர்கள். ஒரு நல்ல காரணத்தோடே இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் தவறு செய்கிறீர்கள். உங்களிடம் ஒரு பழக்கம் உண்டு அதை விட்டு விட வேண்டும் என்று இருக்கிறீர்கள். இந்த இரவு தேவன் அதை எடுத்து விடுவார் என்று நம்புகிறீர்களா? தேவன் உங்களை சுகமாக்கி விடுவார் என்று நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்கள். எல்லாம் சரி. இந்த மனிதனை கட்டுக்கிற சாத்தானை சபிக்கிறேன். மதுபான சாத்தானே இந்த மனிதனை விட்டு வெளியே வா. நீங்கள் செல்லலாம் இனி வாழ்நாள் முழுவதும் ஒரு போதும் குடிக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவுக்கு உங்கள் இதயத்தை கொடுங்கள். சுகம் அடையுங்கள். ஒரு சில நிமிடங்கள் சிறிது நேரம் தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள். 80. அந்த முடவரான மனிதர் ஒருவர் இங்கு இருந்தாரே! அவர் எங்கே? கட்டிலில் இருந்த மனிதர் இவர் தானே? நான் தேவனுடைய ஊழியக்காரர் என்று நம்புகிறீர்களா? இதை இந்த வழியில் ஒரு நிமிடம் பாருங்கள். இளைஞனே நான் உன்னை சுகப்படுத்த முடியவில்லை. உன்னைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் கர்த்தருக்கு தெரியும். ஆனால் நீயும்........நம்புகிறாயா உன் வாழ்க்கையும் தேவனுடைய கரங்களில் இருக்கிறது. நான் அவருடைய ஊழியக்காரன் என்பதை நீ நம்பு. உன் மனைவி உன் அருகில் அமர்ந்திருப்பவர் அல்லது அவள் உன் மனைவியும் இல்லை. அவள் உனக்கு இதயத்துக்கு இனியவள். நீ லூக்கேமியா, இரத்த புற்று நோயினால் துன்படுகிறாய். நீ அங்கேயே இருப்பாயானால் மரித்துப் போவாய். மருத்துவர்களும் எதுவும் செய்ய முடியாது. உனக்கு ஒரேயொரு வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. அது இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்கள். 81. இன்று இரவு மக்கள் உன்னை இந்த இடத்திற்கு இழுத்துவந்து இருக்கிறார்கள். அவர்கள் உன்னை அழைத்து வந்து பிறகு இங்கே ஒரு நோக்கத்துடன் நீ அங்கேயே தங்கிருப்பாய் என்றெண்ணி உன்னை இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் உன்னை விசுவாசிக்கும்படி கேட்டார்கள். தேவனுடைய ஆவியானவர் என்னை இங்கு இழுத்து வந்தார் என்பதை விசுவாசி. அது உண்மைதானே? நான் அவருடைய ஊழியக்காரன் என்று நம்புகிறாயா? நீ இயேசுவை உனக்கு சுகமளிப்பவர் என்று ஏற்றுக்கொள்வாயா? இப்போதே அதை செய். எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு அவர் உனக்கு சுகம் அளிப்பவர் என்று ஏற்றுக்கொள். அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எழுந்து நில். அல்லேலூயா. சகோதரர் ஆஸ்பர்ன் இங்கு வரவும். 10